ஆசியா

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டின் முன் ஒன்றுக்கூடிய மக்கள்!

  • January 5, 2025
  • 0 Comments

நூற்றுக்கணக்கான தென் கொரியர்கள், உறைபனிக்கு மத்தியில் முன்னாள் தென்கொரிய ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகே ஒன்றுக்கூடியுள்ளனர். யூன் சுக் யோலை வெளியேற்றவும் கைது செய்யவும் அழைப்பு விடுத்தனர். ஜனாதிபதி பாதுகாப்பு சேவையின் பணியாளர்கள் வாயிலுக்கு அருகாமையிலும், யூனின் குடியிருப்புக்கு செல்லும் மலைப்பகுதிகளிலும் முள்வேலிகளை நிறுவுவதைக் காண முடிந்தது, இது மற்றொரு தடுப்பு முயற்சிக்கான தயாரிப்பாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக யூனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் அதனை நிறைவேற்றுவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரிகள் குழு […]

பொழுதுபோக்கு

அதிரடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற விஜய் சேதுபதி.. புதிய புரோமோ

  • January 5, 2025
  • 0 Comments

வெற்றிகரமாக 91 நாட்களை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. கடந்த மூன்று வாரங்களாக பிக்பாஸ் வீட்டின் உள்ளே உள்ள போட்டியாளர்களை குறைப்பதில் தீவிரம் காட்டி வரும் பிக்பாஸ், தொடர்ந்து டபுள் எவிக்ஷன் செய்து வருகிறார். அந்த வகையில் இந்த வாரமும் 2 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வங்கியில் நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில், ஃபைனலிசில் ஒருவராக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட, மஞ்சரி மற்றும் ராணவ் ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது டாப் […]

இலங்கை

இலங்கை : அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறையை வழங்குவது தொடர்பில் பரிசீலனை!

  • January 5, 2025
  • 0 Comments

அரச உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம் பாதிக்காத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறையை வழங்குவது தொடர்பாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விசேட அறிவித்தல் விடுத்துள்ளது. அந்தந்த விடுமுறையை அங்கீகரிப்பதில் மாவட்டச் செயலாளர்கள் பின்பற்ற வேண்டிய தொடர் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் 22, 2022 திகதியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றறிக்கையின்படி, ஊதியம் இல்லாத விடுப்பு வழங்குவதில் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக தொடர் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அரச உத்தியோகத்தர்கள் சிலர் 05 […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு : பல விமானங்கள் இரத்து!

  • January 5, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கடுமையான வானிலை காரணமாக சில விமானங்கள் இரத்து, செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சில விமானங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பனி நீக்கம் மற்றும் “பாதுகாப்பு காரணங்களுக்காக” குறைந்தது இரண்டு மணிநேரம் பர்மிங்காம் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய தகவல்களுக்கு தங்கள் விமான நிறுவனத்துடன் சரிபார்க்குமாறு பயணிகளிடம் அறிவுறுத்தியுள்ளது. கேனரி தீவுகள், ஷார்ம் எல் ஷேக் மற்றும் புக்கரெஸ்ட் ஆகிய இடங்களில் இருந்து குறைந்தது ஏழு விமானங்கள் வர இருந்த நிலையில் இரத்து  மற்றும் தாமதங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் […]

வட அமெரிக்கா

அரசியல் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு தென் கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆண்டனி பிளிங்கன்

  • January 5, 2025
  • 0 Comments

அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவியாய் தவிக்கும் தென்கொரியாவுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வருகையளித்துள்ளார். அங்கு, பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபரின் கொள்கைகளை தொடர அவர் ஊக்குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. திங்கட்கிழமை (ஜனவரி 6) அன்று தென்கொரியாவின் வெளியுறவு அமைச்சர் டே யூலையும் அவர் சந்திக்கிறார். கடந்த டிசம்பர் 3ஆம் திகதி ராணுவச் சட்டத்தை அமல்படுத்த முயற்சி செய்து தோல்வியடைந்த அதிபர் யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஜனவரி 6ஆம் திகதி […]

இலங்கை

அதானியின் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய தயாராகும் இலங்கை அரசாங்கம்!

  • January 5, 2025
  • 0 Comments

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மன்னார் மற்றும் புனரீன் பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளது. குறித்த பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு கிட்டத்தட்ட 8.26 சென்ட் வீதம் செலுத்துவதற்கு […]

ஐரோப்பா

ரஷ்யாவில் திடீரென மூடப்பட்ட விமான நிலையம் – மறைக்கப்பட்ட காரணம்

  • January 5, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் உள்ள புல்கொவோ விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் திடீரென இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் பயணம் செய்யும் விமானங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏன் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. காரணம் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் உக்ரைன் ஆகாயத் தாக்குதல்களை நடத்தும் அபாயத்தால் முன்பு ரஷ்ய விமான நிலையங்கள் மூடப்பட்டன.. விமானச் சிப்பந்திகளும் அதிகாரிகளும் பாதுகாப்பை உறுதிசெய்ய ஆன […]

ஆசியா

ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவு – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • January 5, 2025
  • 0 Comments

ஜப்பானில் கடலை ஒட்டிய மலைப்பகுதிகளில் ஏற்படும் கடும் பனிப்பொழிவால் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்று காலை நிலவரப்படி Aomori மாநிலத்தில் உள்ள Hakkoda மலைப்பகுதியில் 390 செண்டிமீட்டருக்கும் அதிகமாகப் பனி படிந்தது. ஆண்டுதோறும் இந்தக் காலக்கட்டத்தில் வழக்கமாகப் பெய்யும் பனியைவிட அது ஒரு மடங்கு அதிகம். Niigata மாநிலத்தின் Itoigawa நகரிலும் வழக்கத்தைவிட அதிக அளவில் பனி கொட்டியது. மலைப்பகுதிகளில் பனிச்சரிவை எதிர்கொள்ள மக்கள் ஆயத்தமாக இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்தனர். மின் […]

வட அமெரிக்கா

அமெரிக்க வரலாற்றில் மோசமான ஜனாதிபதி ஜோ பைடன் – கடுமையாக விமர்சித்த டிரம்ப்

  • January 5, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதி ஜோ பைடன் தான் என டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட அவர், இதனை குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டின் முதல் 2 நாட்களில் நடந்த அசம்பாவிதங்களுக்கு ஜனநாயக கட்சியின் திறந்த எல்லைக் கொள்கை தான் காரணம் என கூறினார். பயங்கரவாதம் மற்றும் பிற வன்முறை சம்பவங்களால் அமெரிக்காவில் மோசமான நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தமது பிரச்சாரத்தின்போது போது பலமுறை கூறியிருந்ததாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். கற்பனை செய்து பார்க்க […]

ஐரோப்பா

உக்ரைனின் செயலால் இயல்பு வாழ்க்கை இழந்த மால்டோவா மக்கள்

  • January 5, 2025
  • 0 Comments

மால்டோவாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாயை உக்ரைன் அரசு துண்டித்துள்ளது. இதனால் மால்டோவா மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சோவியத் யூனியன் உடைந்தபோது தனி நாடாக உருவான மால்டோவாவுக்கு, ரஷ்யா இலவசமாக எரிவாயு வழங்கிவருகிறது. ரஷ்யாவின் நட்பு நாடான மால்டோவாவுக்கு, உக்ரைன் வழியாக குழாய் மூலம் எரிவாயு அனுப்பப்பட்டுவந்தது. இந்த நிலையில், ரஷ்யா உடனான போரால் எரிவாயு குழாயை உக்ரைன் அரசாங்கம் துண்டித்துள்ளது. இதனால், குளிர் காலம் தொடங்கியுள்ள மால்டோவாவில் மக்கள் வீடுகளில் எரிவாயு ஹீட்டர்களை […]