மொசாட் உளவாளிக்கு இஸ்ரேலில் மரண தண்டனை நிறைவேற்றம்
12 நாட்கள் நடைபெற்ற போரின் போது ஏவுகணைத் தளங்கள் தொடர்பான உளவுத் தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது.
உளவு பார்த்தல் மற்றும் இஸ்ரேல் உளவுத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் Hossein Pedaran என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் நீதித்துறையினால் நடத்தப்படும் Mizan செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாணமான இஸ்பஹானில் (Isfahan) அமைந்துள்ள இராணுவத் தளங்கள் தொடர்பான தகவல்களை இஸ்ரேலின் ‘மொசாட்’ (Mossad) உளவுத்துறைக்கு Hossein Pedaran வழங்கியதாகவும், நிதி ஆதாயத்திற்காகவே அவர் இந்த உளவு வேலையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




