ஐரோப்பா

இத்தாலிய பாடசாலைகளில் கடுமையாகும் சட்டங்கள் – ஆடைகளுக்கும் கட்டுப்பாடு

இத்தாலியப் பாடசாலைகளில் முகத்தை மறைக்கும் ஆடைகளை தடை செய்யவும், வகுப்பில் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பிரதமர்  ஜார்ஜியா மெலோனி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய வகுப்பில் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் அதிகபட்ச எண்ணிக்கையைச் சட்டப்பூர்வமாக நிர்ணயிப்பதற்கான நடவடிக்கை விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், படசாலைச் சூழலுடன் ஒன்றிணைவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர்கள் இத்தாலிய மொழியைக் கற்றுக்கொள்வதை கட்டாயமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் பாடசாலைகளில் புர்கா, மற்றும் நிகாப் போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகளை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“ஒரு வகுப்பில் இத்தாலிய மொழி புரியாத ஒரே ஒரு குழந்தை மட்டும் இருந்தால், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் அந்தக் குழந்தை மொழியைக் கற்றுக்கொண்டு விரைவாக மற்றவர்களுடன் ஒன்றிணைந்துவிட முடியும். ஆனால், மொழி புரியாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டால் – அல்லது பெரும்பான்மையாகிவிட்டால்  அது ஒருங்கிணைப்பு ஆகாது; அது புறக்கணிப்பு என்றே கருதப்படும்,” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்