வன்முறையை சட்டப்பூர்வமாக்க திட்டமிடும் பிரான்ஸ் அரசாங்கம் – மக்கள் எதிர்ப்பு பேரணி
வன்முறையை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துவது குறித்து முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிராக, பிரான்ஸில் இன்று பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பாரிஸில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து இந்த பேரணியை முன்னெடுத்திருந்தனர்.
இந்தச் சட்டம், காவல்துறை மற்றும் ஜெண்டார்ம்களுக்கு gendarmes“கொல்வதற்கான உரிமம்” போல இருக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த சட்டத்தின்படி, வன்முறையைப் பயன்படுத்தும் எந்தவொரு சட்ட அமலாக்க அதிகாரியும் தனது ஆயுதத்தைப் பயன்படுத்தியதில் சட்டப்பூர்வமாகவே செயல்பட்டதாகக் கருதப்படுவார்.
ஜூலை மாதம், தேசிய சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் இந்த சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது செனட் சபையில் வாக்கெடுப்பிற்கு வரவுள்ளது.
இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல்வாதிகள், உரிமை அமைப்புகள் மற்றும் பிற ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பேரணி நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




