வட அமெரிக்கா

டிரம்ப் செனட்டர் மார்கோ ரூபியோவை வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்க வாய்ப்பு

  • November 12, 2024
  • 0 Comments

அமெரிக்க செனட்டர் மார்கோ ரூபியோவைத் தமது வெளியுறவு செயலாளராக டோனல்ட் டிரம்ப் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக நவம்பர் 11ஆம் திகதி தகவல் அறிந்த தரப்புகள் தெரிவித்துள்ளன. இதன்வழி, டிரம்ப் ஜனவரியில் அதிகாரபூர்வமாகப் பதவியேற்றபின், ஃபுளோரிடாவில் பிறந்த ஓர் அரசியல்வாதி அமெரிக்காவின் ஆக உயர்மட்ட அரசதந்திரியாகும் முதல் லத்தீன் வம்சாவளியைச் சேர்ந்தவராக இருப்பார். வெளியுறவு அமைச்சர்க்கான டிரம்ப்பின் பட்டியலில், மிகக் கடுமையாகக் குரல்கொடுக்கக்கூடியவர் செனட்டர் ரூபியோ என்று கூறப்படுகிறது. சீனா, ஈரான், கியூபா உட்பட அமெரிக்காவின் புவிசார் எதிராளிகள் […]

ஐரோப்பா

ஆங்கில கால்வாயில் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பயிற்சிகளை மேற்கொண்ட ரஷ்யா!

  • November 12, 2024
  • 0 Comments

ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஷ்ய கடற்படை போர்க்கப்பல் ஆங்கில கால்வாயில் பயிற்சிகளை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ப்ராஜெக்ட் 22350 போர்க்கப்பல் அட்மிரல் கோலோவ்கோ – சேனல் வழியாக சென்றதாக ரஷ்யாவின் அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதில் சிர்கான் ஹைப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த கேனலில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகள் மற்றும் ஆபத்தான இலக்குகளைத் தவிர்ப்பதற்கான பயிற்சிகளை நடத்தியjாக தெரிவித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், அட்மிரல் கோலோவ்கோ, நவம்பர் 2 […]

பொழுதுபோக்கு

இலங்கையில் அமரன் செய்த வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா?

  • November 12, 2024
  • 0 Comments

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராவார். அஜித் விஜய் ரஜினி என்ற வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் இடம்பிடித்துள்ளார் என்றால் பொறுத்தமானதாகத்தான் இருக்கும். இந்த நிலையில், இவர் நடிப்பில் அமரன் படம் கடந்த தீபாவளிக்கு வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அமரன் உலகம் முழுவதும் சுமார் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதோடு இலங்கையில் அமரன் படம் 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். […]

இலங்கை

இலங்கை : ராஜகிரியவில் பற்றி எரிந்த ஆடை தொழிற்சாலை!

  • November 12, 2024
  • 0 Comments

ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் அமைந்துள்ள தற்காலிக ஆடைத் தொழிற்சாலை கட்டிடத்தில் தீ பரவியுள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டுவர கோட்டே தீயணைப்புத் திணைக்களத்தின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயினால் ஏற்பட்ட சேதத்தின் அளவை மதிப்பிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பொழுதுபோக்கு

நடிக்கும் போதே கண்ணை மூடிய சமந்தா… திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்

  • November 12, 2024
  • 0 Comments

சமீபத்தில் வெளியான சீட்டாடல் வெப் தொடரை பார்த்த ரசிகர்கள், “என்ன ஒரு நடிப்பு, அற்புதம் சம்மு” என பாராட்டி வருகிறார்கள். ஒரு பெண் குழந்தையை சமந்தா வளர்க்கும் விதம் பற்றி பலரும் பாராட்டுகிறார்கள். மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டே சமந்தா கஷ்டப்பட்டு இந்த தொடரில் நடித்துள்ளார். ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வருண் தவான், சமந்தா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த Citadel: Honey Bunny வெப்தொடர் அமேசான் பிரைமில் ரிலீஸாகியுள்ளது. பல […]

இலங்கை

அமெரிக்க விடுத்த பயண எச்சரிக்கை – இலங்கையின் விசேட கோரிக்கை

  • November 12, 2024
  • 0 Comments

அமெரிக்க விடுத்த பயண எச்சரிக்கையை அந்த நாடு நீக்கிக்கொள்ளவேண்டும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. அறுகம்குடா தொடர்பில் அண்மையில் அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்திருந்தது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 23ம் திகதி அறுகம்குடாவில் தாக்குதல் இடம்பெறலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வேண்டுகோள்விடுத்தது அறுகம்குடாவில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் பகுதிகளில் தாக்குதல் இடம்பெறலாம் என நம்பகதன்மை மிக்க தகவல்கள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் வெளிநாட்டு பெண்கள் இருவர் அதிரடியாக கைது

  • November 12, 2024
  • 0 Comments

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்ட இரண்டு வெளிநாட்டு பெண்கள் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கண்டி மத்திய சந்தை வளாகத்தில் வர்த்தகம் செய்து கொண்டிருந்த சீன பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வாழ்வியல்

அதிக நேரம் தூங்கினாலும் ஆபத்து – மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்

  • November 12, 2024
  • 0 Comments

தூக்கத்தின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்படுவது அவசியமானது. பொதுவாக, ஒருவர் தினமும் 6 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், அதிக நேரம் தூங்குவது உடல் நலத்துக்கு ஆபத்தானது என புதிய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 8 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குபவர்களுக்கு பக்கவாதம், நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தூக்கம் அதிகமாகியால் மனச்சோர்வு, அறிவாற்றல் குறைபாடு, தலைவலி போன்ற பிரச்சனைகள் கூட ஏற்படக்கூடும். அதேபோல், போதுமான […]

ஐரோப்பா

இத்தாலியில் பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி – மாயமான ரயில்

  • November 12, 2024
  • 0 Comments

இத்தாலியில் சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பதால் அதிவேக ரயில் ஒன்று சுமார் ஒரு மணி நேரம் முன்கூட்டியே புறப்பட்டுள்ளதால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர். அதனால் ரோம் நகரின் டெர்மினி ரயில் நிலையத்தில் பயணிகள் பலரும் தவிக்கவிடப்பட்டனர். Trenitalia நிறுவனத்தின் Silver Arrow அதிவேக ரயில் ரோமிலிருந்து ஜெனோவா நகருக்கு மாலை 4.20 மணிக்குப் புறப்படவிருந்தது. ரயிலைத் தேடிய பயணிகளுக்கு அதிர்ச்சியடைந்துள்ளனர். அது மதியம் 3.30 மணிக்கெல்லாம் புறப்பட்டுள்ளது. வழக்கமான ரயில் பாதையில் மேம்பாட்டுப் பணிகள் நடந்ததால் ரயில் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3,50,000 குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் வழங்கி கின்னஸ் சாதனை படைத்த பெண்

  • November 12, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த தாய் இரக்க குணத்துக்கே அடையாளமாக திகழ்ந்துள்ளார். அலிசா ஓக்லெட்ரீ என்ற 36 வயதான தாய் இதுவரை 2,645.58 லிட்டர் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு தானமாக வழங்கியுள்ளார். இதன் மூலம் அவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். மேலும் தாய்ப்பாலை தானமாக கொடுத்ததின் மூலம் அவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையையும் ஆரோக்கியமானதாக உருவாக்கி உள்ளார். இதுகுறித்து கின்னஸ் அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், ‘பச்சிளங் குழந்தைகளின் மிகவும் ஊட்டச்சத்து மிக்க உணவான தாய்ப்பாலை தொடர்ந்து அலிசா ஓக்லெட்ரீ […]