ஐரோப்பா

ஸ்பெயினை உலுக்கிய தீ விபத்து – முதியோர் இல்லத்தில் 10 பேர் பலி

  • November 16, 2024
  • 0 Comments

ஸ்பெயினின் வடபகுதியில் இருக்கும் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் இக்கட்டான நிலையில் இருப்பதாகவும் சிலர் புகை சுவாசித்ததற்குச் சிகிச்சை நாடுவதாகவும் வட்டார அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைவரும் இல்லத்தின் குடியிருப்பாளர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. வில்லாபிராங்கா டெல் எப்ரோ (Villafranca del Ebro) வட்டாரத்திலுள்ள இல்லத்தில் ஸ்பெயினின் நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 35 கிலோமீட்டர் தொலைவிலிருந்து முதியோர் இல்லத்துக்குச் சென்ற தீயணைப்பாளர்கள் […]

ஐரோப்பா

3 பிரித்தானிய விமான நிலையங்கள் விற்பனை – கொள்வனவு செய்யும் ஜெர்மனி நிறுவனம்

  • November 16, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் உள்ள 3 விமான நிலையங்கள் ஜெர்மனியின் AviAlliance நிறுவனத்திற்கு விற்கப்படவுள்ளன. AviAlliance ஜெர்மனியில் விமானநிலைய நிர்வாகத்துக்குப் பெயர் பெற்ற நிறுவனமாகும். அந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ஒன்றரை பில்லியன் பவுண்ட் என தெரியவந்துள்ளது. ஸ்பெயினைச் சேர்ந்த Ferrovial, ஆஸ்திரேலியாவின் Macquarie ஆகிய நிறுவனங்கள் Aberdeen, Glasgow, Southampton ஆகிய நகரங்களில் உள்ள மூன்று விமான நிலையங்களின் நிர்வாகத்தைக் கவனித்துவந்தன. அந்த மூன்று விமான நிலையங்களையும் ஆண்டுதோறும் 10.8 மில்லியன் பயணிகள் பயன்படுத்துகின்றனர். அடுத்த ஆண்டு (2025) […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மெட்டா நிறுவனத்திற்கு 80 கோடி யூரோ அபராதம் – ஐரோப்பிய ஆணையம் அதிரடி!

  • November 16, 2024
  • 0 Comments

மெட்டாநிறுவனத்தை நிர்வகிக்கும் மார்க் ஜுக்கர்பர்க் முறையற்ற வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதாவது மெட்டா நிறுவனம், மார்க்கெட்பிளேஸ் எனும் விளம்பரத் தொழில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் தொழிலை பேஸ்புக்கில் புகுத்திய மெட்டா, பயனர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மார்க்கெட்பிளேஸ்ஸை கட்டாயம் அணுகும் வகையில் நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதனால், தவறான நடைமுறைகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாகப் புகார் எழுந்தது. அவர்களைத் தொடர்ந்து, பல நாடுகளும் குற்றம் சாட்டி வந்தனர். இதனால், இதுபற்றி 27 நாடுகளின் ஒழுங்குமுறை அதிகாரிகள் […]

இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் இன ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த தேர்தல் முடிவுகள்

  • November 16, 2024
  • 0 Comments

இன ஐக்கியத்தை வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் பெறுபேறுகள் அமைந்துள்ளதென பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று தெரிவான சமன் வித்தியாரத்ன தெரிவித்தார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் எமக்கு கிடைத்த வெற்றி பெறு வெற்றியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெளிவந்துள்ள பாராளுமன்ற தேர்தல் பெறுபேறுகளின் மூலம் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடு மற்றும் ஒற்றுமையை காணக்கூடியதாக இருக்கிறது. இது அதி விசேட வெற்றியாகும். பதுளையில் நான் பெற்ற வாக்குகளை விட யாழ்ப்பாணத்தில் […]

இலங்கை செய்தி

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

  • November 16, 2024
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் நிலவுவதால் மின்னலினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் காலை வேளையில் மழை […]

செய்தி

12 நாடுகள் வழியே 46,239 கிலோமீட்டர் பயணித்த இன்ஸ்டாகிராம் பிரபலம்

  • November 16, 2024
  • 0 Comments

இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் 274 நாள்களில் 46 ஆயிரத்து 239 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜப்பான் வந்தடைந்தார். எகிப்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும், நீண்ட தூர பயண ஆர்வலருமான ஒமர் நோக் என்பவரே இவ்வாறு பயணித்துள்ளார். 30 வயதான அவர், சவூதி அரேபியா, ஈரான், ஆப்கனிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், சீனா என 12 நாடுகள் வழியே ஜப்பான் சென்று சேர்ந்தார். பல இடங்களில் வாகனங்களில் லிஃப்ட் கேட்டும், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் நாடுகளில் குதிரை மற்றும் ஒட்டகங்களில் […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

அநுர அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள இலங்கை மக்கள் – நன்றி தெரிவித்த கட்சி

  • November 16, 2024
  • 0 Comments

பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் தேசிய மக்கள் சக்தி நேற்று பிற்பகல் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியபோது, ​​காலாவதியான பழைய அரசியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பொதுப் பணத்தில் தங்கியிருக்கும் குடும்ப ஆட்சி, மேல்தட்டு ஆதிக்க அரசியல் முடிந்துவிட்டதாக செயலாளர் மேலும் குறிப்பிட்டார். கடந்த ஐம்பது நாட்களில் தேசிய மக்கள் படையின் நடைமுறையை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். […]

செய்தி

தேசிய மக்கள் சக்தியை வடநாட்டினர் ஆதரிப்பது முதல் தடவை – வஜிர அபேவர்தன

  • November 15, 2024
  • 0 Comments

தென்னிலங்கையில் இருந்து வந்த ஒரு கட்சி மீது வடக்கில் மக்கள் முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கையை முதல் தடவையாகக் காட்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். நாட்டின் தேர்தல் வரலாற்றில் இது மிகவும் சிறப்பானதொரு சந்தர்ப்பமாகும்.வடக்கிலும் கிழக்கிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு சக்திகளுடன் செயற்பட்டாலும் வடக்கில் உள்ள மக்கள் தெற்கில் உள்ள அரசியல் கட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். வடக்கில் உள்ள மக்களின் பிரதிநிதிகள் அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்பதன் மூலம் சுறுசுறுப்பாக ஆட்சியில் […]

செய்தி

இலங்கை: வெலிகமவில் ரயிலுடன் டிரக் மோதி விபத்து – 7 பேர் காயம்

  • November 15, 2024
  • 0 Comments

வெலிகமவில் புகையிரத கடவையில் இலகுரக பாரவூர்தி ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். பொல்வத்தை, வெலிகம கடவையில் ட்ரக் சாரதி சிவப்பு சமிக்கையை மீறி அந்த வழியாக செல்ல முற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

செய்தி

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 மீட்புப் பணியாளர்கள் பலி

  • November 15, 2024
  • 0 Comments

வடகிழக்கு லெபனானில் உள்ள அவசரகால பதிலளிப்பு மையம் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 15 மீட்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போரில் லெபனான் அவசரகால பதிலளிப்பவர்கள் சம்பந்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். Baalbek நகருக்கு அருகிலுள்ள Douris இல் நடந்த தாக்குதல், லெபனான் அரசாங்கத்துடன் தொடர்புடைய மற்றும் ஈரானிய ஆதரவுக் குழுவான ஹெஸ்பொல்லாவுடன் இணைக்கப்படாத சிவில் பாதுகாப்பு அமைப்பின் கட்டிடத்தை அழித்தது. பாதிக்கப்பட்டவர்களில் நகரின் சிவில் பாதுகாப்புத் தலைவர் பிலால் ராத் அடங்குவதாக […]