இந்தியா

இந்தியாவில் தீயில் கருகி உயிரிழந்த 10 குழந்தைகள் : 16 குழந்தைகள் உயிருக்கு போராடி வருவதாக தகவல்!

  • November 16, 2024
  • 0 Comments

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 பிறந்த குழந்தைகள் உயிரிழந்த நிலையில், 16 குழந்தைகள் உயிருக்கு போராடி வருகின்றனர். மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் செறிவூட்டிக்குள் ஏற்பட்ட மின்சுற்று காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார். இதன்போது குறைந்தது 54 குழந்தைகள் NICU வில் சிகிச்சைப் பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு 44 […]

இலங்கை

இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின் கூடும் பாராளுமன்றம் : கொள்கைகளை முன்வைக்கும் ஜனாதிபதி!

  • November 16, 2024
  • 0 Comments

இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் தொடக்கத்தில் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதி அவர்கள் நவம்பர் 21, 2024 அன்று பிற்பகல் 3:00 மணிக்கு சமர்ப்பிக்க உள்ளார். நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், நாடாளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக நாடாளுமன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, பாராளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைக்கிறார். இங்கு ஜனாதிபதி […]

இலங்கை

இலங்கை : தேசியப் பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு செல்லும் நாமல்!

  • November 16, 2024
  • 0 Comments

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர்  சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய அவர்,  “இந்த ஆணையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எங்களிடம் மாவட்ட அளவில் 02 கவுன்சிலர் பதவிகளும் தேசிய பட்டியலில் ஒரு கவுன்சிலர் பதவியும் உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

இலங்கை

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த கோரிக்கை

  • November 16, 2024
  • 0 Comments

இலங்கையில் தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அமைதியாகச் செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் பொது மக்களிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து காவல்துறை பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடந்த நாட்களில் தேர்தல் சட்ட விதிகளை மீறிய 581 பேர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

இலங்கை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டு பெண்

  • November 16, 2024
  • 0 Comments

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண்ணொருவர் கைதாகியுள்ளார். 18 கோடியே 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 22 கிலோகிராம் குஷ் மற்றும் ஹஷீஸ் ரக போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் நேற்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தாய்லாந்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். […]

செய்தி

நடுவானில் ஆட்டங்கண்ட விமானம் – ஐரோப்பாவுக்கு திசைதிருப்பிய விமானிகள்

  • November 16, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் மயாமி நகருக்குச் சென்றுகொண்டிருந்த விமானம் மோசமாக ஆட்டங்கண்டதால் அது ஐரோப்பாவுக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டது. சம்பவத்தில் பயணிகளுக்கும் விமானிகளுக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. விமானத்தில் 254 பயணிகள் இருந்தனர். டென்மார்க்கில் உள்ள கோப்பன்ஹேகன் விமான நிலையத்துக்கு விமானம் திசைதிருப்பப்பட்டது. அங்கு அது சோதிக்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்தது. விமானம் ஆட்டங்கண்ட பிறகு அதன் மீது சோதனை நடத்தப்படுவது வழக்கம் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கோப்பன்ஹேகன் விமான நிலையத்தில் அதற்குத் தேவையான வசதிகள் இருப்பதால் அது […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் அநுர அரசாங்கத்தில் 20 பெண் உறுப்பினர்கள்

  • November 16, 2024
  • 0 Comments

இலங்கையில் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதன் ஊடாக 20 பெண்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். அதற்கமைய, ஜனாதிபதி அநுரவின் அரசாங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பங்களித்துவம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்கக்ப்படுகின்றது. தெரிவு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலான பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகும். தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பட்டியலில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்தில் சமன்மலி குணசிங்க பதுளை மாவட்டத்தில் அம்பிகா சாமுவேல் நிலாந்தி கோட்டஹச்சி […]

வாழ்வியல்

தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கான முக்கிய தகவல்

  • November 16, 2024
  • 0 Comments

தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. சிறிய உறுப்பு என்றாலும், தைராய்டு சுரப்பி நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக பெரும்பாலானோருக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது. தைராய்டு பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற சில உணவுகளை சாப்பிடுவது நன்மை பயக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். தைராய்டு சுரப்பி தொடர்பான கோளாறுகள் உடலின் ஹார்மோன் சமநிலையை பாதிக்கிறது. இதனால், வளர்சிதை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் – 2,500 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு

  • November 16, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் – விக்டோரியா மாநிலத்தில் உள்ள வுடென்ட் அருகே 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெல்போர்னில் இருந்து வடமேற்கே 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வுடென்ட் பகுதியில் இன்று காலை 10.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் ஏழு கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பல்லாரட், கிஸ்போர்ன், ட்ரெண்டாம் மற்றும் பேக்கஸ் மார்ஷ் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 103 பேர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய […]

விளையாட்டு

கோலிக்கும் காயமா? இந்தியாவுக்கு பின்னடைவு?

  • November 16, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. தற்போது பெர்த்தில் உள்ள வெஸ்ட் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. முதலில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்து இந்திய […]