ஐரோப்பா

ஹங்கேரியில் கருக்கலைப்பு விதிகள் தளர்வு – குற்றவியல் சட்டத்தை திருத்தவும் உறுதி

சர்ச்சைக்குரிய கருக்கலைப்பு விதியைத் திரும்பப் பெற ஹங்கேரி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் பீட்டர் மாக்யார் Peter Magyar இன்று அறிவித்துள்ளார்.

பெண்களின் உரிமைகளுக்கான பரந்த சீர்திருத்தத் தொகுப்பின் ஒரு பகுதியாக, அவசரகால கருத்தடைக்கான அணுகலை எளிதாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பீட்டர் மாக்யாரின் இந்த கொள்கை முடிவுகள் முன்னாள் பிரதமரான விக்டர் ஓர்பானின் கொள்கைகளில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பீட்டர் மாக்யார் முகப்புத்தகப் பக்கத்தில்  காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஹங்கேரியப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்காக, பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் கட்டுப்படுத்துவதற்கான ஒரு விரிவான நடவடிக்கையை நாங்கள் முன்மொழிகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பெண்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அந்தரங்கப் படங்களைத் தவறாகப் பயன்படுத்துவது ஒரு குற்றச் செயலாக மாறும், அதே நேரத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவியல் நடவடிக்கைகளின் போது சிறப்பு கவனம் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்