இந்தியா

இந்தியாவில் தீயில் கருகி உயிரிழந்த 10 குழந்தைகள் : 16 குழந்தைகள் உயிருக்கு போராடி வருவதாக தகவல்!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 10 பிறந்த குழந்தைகள் உயிரிழந்த நிலையில், 16 குழந்தைகள் உயிருக்கு போராடி வருகின்றனர்.

மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் செறிவூட்டிக்குள் ஏற்பட்ட மின்சுற்று காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார்.

இதன்போது குறைந்தது 54 குழந்தைகள் NICU வில் சிகிச்சைப் பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு 44 குழந்தைகளை காப்பாற்றியுள்ளனர்.

இருப்பினும் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், 16 குழந்தைகள் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் மாநில பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே