செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

  • September 18, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.17 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.70 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.30 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

உலகம் செய்தி

ஹொங்கொங்கிற்குச் சென்ற விமானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த பயணி

  • September 18, 2024
  • 0 Comments

டாக்காவிலிருந்து ஹொங்கொங்கிற்குச் சென்று கொண்டிருந்த Cathay Pacific விமானத்தில் மயங்கி விழுந்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் 47 வயதுடைய பங்களாதேஷ் நாட்டவராகும். விமானம் ஹொங்கொங்கில் தரையிறங்கியபோது அவர் மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனால் அது பலன் தரவில்லை எனவும் அவரது மரணத்திற்கான காரணம் விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது இந்த மாதத்தில் (செப்டம்பர் 2024) Cathay Pacific விமானத்தில் நிகழ்ந்த இரண்டாவது சம்பவமாகும். இதற்குமுன்னர் செப்டம்பர் 8ஆம் தேதி ஹொங்கொங்கிலிருந்து மும்பைக்குச் […]

பொழுதுபோக்கு

ரஜினிக்கு மனைவியாக மஞ்சுவாரியார்.. பெயர் என்ன தெரியுமா?

  • September 18, 2024
  • 0 Comments

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள நிலையில் படத்தை ஜெய் பீம் புகழ் டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் பெயர்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. மஞ்சுவாரியார் கதாபாத்திரத்தின் பெயர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கும் மஞ்சுவாரியார் தாரா என்ற பெயரின் நடிக்கிறார். இந்த […]

இலங்கை செய்தி

இலங்கையில் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களுக்கு விசேட அறிவிப்பு

  • September 18, 2024
  • 0 Comments

இலங்கையில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள், அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தைச் சமர்ப்பித்து காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் வாக்காளர் அட்டையைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 21ஆம் […]

பொழுதுபோக்கு

லெஜெண்ட் அண்ணாச்சியால் ஷ்யாம் காட்டில் கொட்டும் அடைமழை

  • September 18, 2024
  • 0 Comments

சரவணன் அருள் அண்ணாச்சி நடிக்க வந்த புதிதில் ஏராளமானோர் ஏளனம் செய்தனர். ஆனால் அதை எல்லாம் பொறுப்பெடுத்தாமல் “தி லெஜன்ட்” படத்தில் பட்டையை கிளப்பினார். இவருடன் நடிக்க பல ஹீரோயின்கள் மறுப்பு தெரிவித்த நிலையில் ஊர்வசி ரௌடேலா என்னும் விளம்பர மாடல் அவருக்கு ஜோடியாக நடித்தார். படம் கிராமத்து தியேட்டர்களில் ஓரளவு வசூலை பெற்று தந்தது. இப்பொழுது அடுத்த படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் அண்ணாச்சி. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் சரவணன் அண்ணாச்சி. இவரை தெரியாதவர்கள் யாருமே […]

வாழ்வியல்

விரதம் இருப்பதால் உடலில் ஏற்படும் எண்ணற்ற நன்மைகள்

  • September 18, 2024
  • 0 Comments

நாம் உயிர் வாழ உணவு இன்றியமையாதது. சமச்சீரான, சத்தான உணவை உட்கொண்டவது ஆரோக்கியத்தின் முதல் படியாக பார்க்கப்படுகின்றது. நாம் உட்கொள்ளும் உணவின் தரமும், அளவும், ஊட்டச்சத்துகளும் மிக முக்கியம். நாம் சரியான நேரத்தில் போதுமான அளவு உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அவ்வப்போது உணவை குறைத்துக்கொள்வதும், சாப்பிடாமல் இருந்து, வயிற்றுக்கும், செரிமான அமைப்புக்கும் ஓய்வு அளிப்பதும் முக்கியம். இதன் அடிப்படையிலேயே நம் பாரம்பரியத்தில் விரதங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? […]

வட அமெரிக்கா

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்கும் முயற்சியில் கமலா ஹாரிஸ்

  • September 18, 2024
  • 0 Comments

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என பேசிய துனை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்தார். அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவில், கருப்பின பத்திரிகையாளர்களுக்கான கருத்தரங்கில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்பாக, காஸா போரை நிறுத்தி பிணை கைதிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், வளைகுடா நாடுகளில் அமைதியான சூழலை உருவாக்குவதன் மூலம் ஈரானின் கை ஓங்குவதை தடுக்க முடியும் என அவர் கூறினார்.

செய்தி

இலங்கை தேர்தல் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை!

  • September 18, 2024
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரம், பேரணி, துண்டுப்பிரசுர விநியோகம் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய கொழும்பு, நுகேகொடை, கொட்டாவை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளில் பிரதான வேட்பாளர்களின் […]

மத்திய கிழக்கு

லெபனானில் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய பேஜர் கருவிகள் – 8 பேர் பலி – 2,750 பேர் படுகாயம்

  • September 18, 2024
  • 0 Comments

லெபனானில் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய பேஜர் கருவிகளால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பல்வேறு அரச அதிகாரிகள் தகவல் தொடர்புக்காகப் பயன்படுத்தி வரும் பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 2,750 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. காசா போர் தொடங்கிய பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஸ்புல்லா அமைப்பினர் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அவர்கள் பயன்படுத்தி வந்த பேஜர் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

விண்டோஸ் ஸ்டோரில் Adobe Photoshop எக்ஸ்பிரஸ் வசதி

  • September 18, 2024
  • 0 Comments

அடோப்பிஎக்ஸ்பிரஸ் 8 இந்திய மொழிகளில் சிறப்பம்ச மேம்படுத்தல்களை அறிமுகப்படுத்துகிறது, மில்லியன் கணக்கான பயனர்களுக்கு மொழியியல் பன்முகத்தன்மை, உருவாக்கும் ஏஐ-இன் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டுவருகிறது. அடோப்பி(நாஸ்டாக்: ஏடிபிஇ) அதன் எல்லாமும் உள்ள உள்ளடக்க உருவாக்கும் ஆப் ஆன அடோப்பிஎக்ஸ்பிரஸுக்கு (Adobe Express) இந்திய மொழிகளுக்கான அற்புதமான மேம்படுத்தல்களை அறிவித்தது, இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் யோசனைகள், ஆர்வங்கள், வணிகங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு தனித்துவமான வடிவமைப்புகளை உருவாக்க உதவுகிறது. டெஸ்க்டாப் வெப், மொபைல் ஆகியவற்றில் […]

error: Content is protected !!