பொழுதுபோக்கு

ரஜினிக்கு மனைவியாக மஞ்சுவாரியார்.. பெயர் என்ன தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அமிதாப் பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள நிலையில் படத்தை ஜெய் பீம் புகழ் டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார்.

படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் பெயர்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. மஞ்சுவாரியார் கதாபாத்திரத்தின் பெயர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கும் மஞ்சுவாரியார் தாரா என்ற பெயரின் நடிக்கிறார். இந்த படத்தில் தான் ரஜினியின் மனைவியாக நடித்துள்ளதாகவும் தன்னுடைய கேரக்டர் பெயர் தாரா என்றும் மஞ்சு வாரியர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் Vloggerஆக தான் நடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வேட்டையன் படத்தில் தனக்கு மிகவும் அழுத்தமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தன்னிடம் இந்த கேரக்டர் குறித்து ஞானவேல் பேசியபோது, தனக்கு ரஜினியுடன் இணைவதும் இரட்டை சந்தோஷத்தை கொடுத்ததாகவும் மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்