உலகம்

தென்கொரியாவில் 32 வாகனங்களுடன் மோதி பேருந்து விபத்து – 50இற்கும் மேற்பட்டோர் காயம்

தென் கொரியாவில்  பயணிகள் பேருந்து ஒன்று பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த கோர விபத்து இன்று காலை சியோங்னாம் (Seongnam) நகரில் இடம்பெற்றுள்ளது.

இதில் 57 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் ஒன்பது பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், யாருடைய உயிருக்கும் ஆபத்தான நிலை இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 32 வாகனங்கள் மீது குறித்த பேருந்து மோதியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேருந்தின் பிரேக்குகள் செயலிழந்துவிட்டமையே விபத்துக்கான காரணம் என முதற்ககட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்