இலங்கை

இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு இன்று!

  • September 24, 2024
  • 0 Comments

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றம் கலைப்பு தொடர்பிலான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கத்தின் பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட உள்ளதாகவும் கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய மக்கள் சக்தியின் தற்போது நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும், 15 அமைச்சுக்கள் நான்கு அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்!

  • September 24, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.57 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.02 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.633 […]

ஆசியா செய்தி

ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

  • September 24, 2024
  • 0 Comments

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள இசு தீவுகள் அருகே 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின்படி, நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, ஐசு தீவுக்கூட்டத்திற்குச் சொந்தமான ஹச்சிஜோ தீவை சுமார் 50 செ.மீட்டர் அலை அலைகள் வந்ததாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எப்படியிருப்பினும் மக்கள் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொழுதுபோக்கு

OTTயில் பட்டையை கிளப்ப தயாராகியது GOAT

  • September 24, 2024
  • 0 Comments

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த கோட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ஒட்டி ரிலீஸ் ஆனது. கோட் படத்துக்கு போட்டியாக எந்த படமும் ரிலீஸ் ஆகாததால் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த திரையரங்குகளையும் கோட் திரைப்படம் ஆக்கிரமித்து இருந்தது. திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய கோட் திரைப்படம் கடந்த இரண்டு வாரங்களாக வசூல் வேட்டை நடத்தியது. அப்படம் இதுவரை உலகளவில் […]

இலங்கை

இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்

  • September 24, 2024
  • 0 Comments

இஸ்ரேலில் இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலக்குகள் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்கள் நடத்திய ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்கள் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபா, கலிலி, கோலன் மற்றும் நாசரேத் ஆகிய இடங்களில் வான்வழி ஊடாக பல ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. வறண்ட வனப்பகுதிகளில் குண்டுகள் விழுவதால் அந்தந்த பகுதிகளில் […]

பொழுதுபோக்கு

மனைவியிடமிருந்து கணக்கை மீட்ட ஜெயம் ரவி.. முதலில் செய்த வேலை என்ன தெரியுமா?

  • September 24, 2024
  • 0 Comments

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவகாரத்து சர்ச்சை முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் தனது மனைவி ஆர்த்தி இடம் இருந்து விவாகரத்து பெற உள்ளதாக ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்தார். தனக்கு தெரியாமல் ரவி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆர்த்தி குற்றம் சுமத்தி இருந்தார். இதை அடுத்து ஜெயம் ரவிக்கு பாடகி ஒருவருடன் தொடர்பு என்று கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெயம் ரவி. இதைதொடர்ந்து ஆரம்பத்தில் ஆர்த்தி ஜெயம் ரவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கினார். […]

செய்தி

இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை உணர்த்தும் அறிகுறிகள் – அவதானம்

  • September 24, 2024
  • 0 Comments

இதயத்திற்கு செல்லும், இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் போது, இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைப்பது கடினமாகிறது. இதயத்திற்கு இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டால், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சரியான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம். மார்பில் வலி: மார்பில் வலி அல்லது மார்பு கனமாக இருப்பது போன்ற உணர்வு, இதய அடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். திடீரென்று கடுமையான வலி, அழுத்தம் அல்லது மார்பில் இறுக்கத்தை உணர்ந்தால், […]

இலங்கை செய்தி

இலங்கையில் புதிய ஜனாதிபதி – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அறிவிப்பு

  • September 24, 2024
  • 0 Comments

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் உதவியை வழங்கி வருகின்றது. இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பில், விரைவில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பல அம்சங்களுடன் அறிமுகமான சாம்சங்கின் Galaxy M05 மொபைல்!

  • September 24, 2024
  • 0 Comments

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம் சீரிஸ் லைன்அப்பில் புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. நிறுவனம் இந்தியாவில் புதிதாக Galaxy M05 என்ற 4ஜி மொபைலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த லேட்டஸ்ட் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட் ஃபோனில் MediaTek Helio G85 ப்ராசஸர் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த மொபைல் பட்ஜெட் விலையில் சிறந்த கேமரா திறன்கள் மற்றும் அதிவேகமான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை விரும்புவோருக்கான என்ட்ரி லெவல் டிவைஸாக இருக்கும் என சாம்சங் நிறுவனம் கூறி உள்ளது. இந்தியாவில் […]

விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தும் அஷ்வின்! பல சாதனைகள் முறியடிப்பு

  • September 24, 2024
  • 0 Comments

வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. ஒருகட்டத்தில் 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் இருந்த இந்திய அணியை ஆல் ரவுண்டர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் சரிவில் இருந்து மீட்டனர். இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசியதுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில், அஸ்வினின் சுழல் ஜாலத்தால் இந்தியா […]

error: Content is protected !!