உலகம்

அமெரிக்காவில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

  • September 24, 2024
  • 0 Comments

பிரதமர் மோடி நியூயார்க்கிலிருந்து இந்தியா கிளம்புவதற்கு முன்பு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்தார். அப்போது உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும், பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கும் இந்தியாவின் ஆதரவினை மீண்டும் உறுதிபடுத்தினார். இதுகுறித்து ஜெலான்ஸ்கியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு பிரதமர் மோடி எழுதியுள்ள பதிவில், “நியூயார்க்கில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தேன். இரண்டு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த மாதம் நான் உக்ரைன் சென்றபோது எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் […]

இலங்கை

தினமும் 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக மாறியுள்ள இலங்கை மக்கள்!

  • September 24, 2024
  • 0 Comments

கடந்த 26 மாதங்களில் உள்ளுரில் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப் பார்த்தால் இந்நாட்டு மக்கள் தினமும் 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக மாறியுள்ளதாக பொருளாதார புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் திரு.வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். நாடு கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக புதிய பொருளாதார சீர்திருத்த தொடர் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என  அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஒவ்வொரு மாதமும் இந்நாட்டு மக்கள் […]

மத்திய கிழக்கு

சர்ச்சையை ஏற்படுத்திய திருப்பதி லட்டு – அண்ணே மன்னிச்சிடுங்க அண்ணே

  • September 24, 2024
  • 0 Comments

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலப்பட விவகாரம் இந்து மக்களின் நம்பிக்கைகள், மன உணர்வுகளோடு தொடர்புடையது என்பதால் பெரிய அளவில் அரசியல் சர்ச்சையாக நாளுக்கு நாள் மாறி வருகிறது. இந்த நிலையில் தனது மெய்யழகன் பட புரமோஷனுக்காக ஐதராபாத் வந்திருந்த நடிகர் கார்த்தியிடம் செய்தியாளர்கள் லட்டு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர் இதற்கு அவர் அளித்த பதில் அவரை சிக்கலில் மாட்டிவிட்டுள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் கார்த்தியிடம் […]

இலங்கை

பொதுத் தேர்தலை நடத்தத் தயார்- தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

  • September 24, 2024
  • 0 Comments

எந்த நேரத்திலும் பொதுத் தேர்தலை நடத்தத் தயார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஒரு பொதுத் தேர்தலுக்கான மதிப்பிடப்பட்ட தொகை சுமார் 11 பில்லியன் ரூபாவாக இருக்கும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். அதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் பொதுத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

இஸ்லாத்தின் புனித நூலை எரித்ததற்குப் பழிவாங்கக் கோரி அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளுக்கு ஈரானே பொறுப்பு!

  • September 24, 2024
  • 0 Comments

ஸ்காண்டிநேவிய நாட்டில் 2023 இல் இஸ்லாத்தின் புனித நூலை எரித்ததற்குப் பழிவாங்கக் கோரி அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான குறுஞ்செய்திகளுக்கு ஈரான் பொறுப்பு என்று ஸ்வீடிஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். ஸ்டாக்ஹோமில் உள்ள அதிகாரிகள், ஈரானின் துணை ராணுவப் புரட்சிக் காவலர் “ஒரு தரவு மீறலை” மேற்கொண்டதாகவும், குர்ஆனை பொதுமக்கள் எரித்ததன் மூலம் “சுவீடிஷ் மொழியில் சுமார் 15,000 குறுஞ்செய்திகளை” அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளனர். ஸ்வீடனின் SAPO உள்நாட்டுப் பாதுகாப்பு நிறுவனத்தால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், “ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, IRGC […]

மத்திய கிழக்கு

அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் மத்திய கிழக்கில் கூடுதல் படைகளை அனுப்பியுள்ள அமெரிக்கா

  • September 24, 2024
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் போர் வெடிக்கும் சூழல் அதிகரித்துள்ளதால் மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு கூடுதல் படைகளை அவ்வட்டாரத்திற்கு அனுப்பியுள்ளதாக திங்கட்கிழமை தெரிவித்தது. எத்தனை படைகளை அது அனுப்பியுள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இஸ்ரேலுக்கும் காஸாவுக்கும் இடையில் சண்டை நிறுத்தத்தை கொண்டுவர அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தடுமாறிவரும் நிலையில் இஸ்ரேல் – லெபனான் பூசல் புதிய தலைவலியை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – லெபனான் இடையிலான […]

ஆசியா

சீனாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் ஜப்பானிய மாணவர்கள் – விடுக்கப்பட்டுள்ள சிறப்பு கோரிக்கை!

  • September 24, 2024
  • 0 Comments

சீனாவில் ஜப்பானின் உயர்நிலை பள்ளி மாணவர் ஒருவர் குத்தி கொல்லப்பட்டுள்ள நிலையில் ஜப்பான் தூதுவர் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது ஜப்பானிய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் குழந்தைகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் “ஆதாரமற்ற, தீங்கிழைக்கும் மற்றும் ஜப்பானிய எதிர்ப்பு” சமூக ஊடக இடுகைகளை ஒடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். வெளியுறவு மந்திரி யோகோ கமிகாவா, சீன வெளியுறவு மந்திரி வாங் யீயிடம், கத்திக்குத்து சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தி, தெளிவான விளக்கத்தை […]

இலங்கை

இலங்கை -அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா ரணில் : அதிரடியாக வெளியான அறிவிப்பு!

  • September 24, 2024
  • 0 Comments

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. விக்ரமசிங்க தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்கா

மனநல பிரச்சனைகள் ;பள்ளிகளில் கைப்பேசி பயன்பாட்டுக்கு எதிராக கலிஃபோர்னியா நடவடிக்கை

  • September 24, 2024
  • 0 Comments

பள்ளிகளில் கைப்பேசி பயன்பாட்டைத் தடை செய்யும், கட்டுப்படுத்தும் சட்டத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம் நடைமுறைப்படுத்தியுள்ளது. கைப்பேசிகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் மனநலப் பிரச்சினைகள், கற்றல் குறைபாடுகள் ஆகியவை ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாகப் பல ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மற்ற 13 மாநிலங்கள், பள்ளிகளில் கைப்பேசி பயன்பாட்டுக்குத் தடை, கட்டுப்பாடுகள் விதித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.மற்ற மாநிலங்களுக்கு முன்பாகவே ஃபுளோரிடா மாநிலம் இந்த நடவடிக்கையை 2023ஆம் ஆண்டில் மேற்கொண்டது. சிகரெட் பொட்டலங்களில் […]

பொழுதுபோக்கு

சிம்பிளாக வந்து கெத்து காட்டிய ‘லப்பர் பந்து” – படக் குழுவினர் மகிழ்ச்சி

  • September 24, 2024
  • 0 Comments

லப்பர் பந்து திரைப்படம் எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக படக் குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “லப்பர் பந்து” திரைப்படம் கடந்த 20ம் தேதி திரைக்கு வந்தது. இந்த நிலையில் திரைப்படக் குழுவினர் சேலம் வருகை தந்தனர். சேலம் கிச்சிபாளையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் திரையரங்கில் படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து நடிகர்கள் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், […]

error: Content is protected !!