இலங்கை

இஸ்ரேலில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்

இஸ்ரேலில் இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலக்குகள் மீது ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்கள் நடத்திய ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்கள் காரணமாக அங்கு தங்கியுள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபா, கலிலி, கோலன் மற்றும் நாசரேத் ஆகிய இடங்களில் வான்வழி ஊடாக பல ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

வறண்ட வனப்பகுதிகளில் குண்டுகள் விழுவதால் அந்தந்த பகுதிகளில் தீ பரவ ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு அவ்வப்போது மேற்கொள்ளப்படும் இந்த தாக்குதல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அறிவித்துள்ளார்.

பாதுகாப்பு சத்தம் எழுப்பப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், ​​இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான வீடுகளுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்