ஆப்பிரிக்கா

காங்கோவில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட 37 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

  • September 14, 2024
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) மத்திய ஆபிரிக்க நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 37 பேருக்கு இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டவர்களில் மூன்று அமெரிக்க குடிமக்கள், பெல்ஜிய பிரஜை ஒருவர் மற்றும் கனேடியர் ஒருவரும், பிரித்தானியர் ஒருவரும் உள்ளடங்கியுள்ளார். பயங்கரவாதம், கொலை மற்றும் கிரிமினல் தொடர்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கே மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்ய பிரதிவாதிகளுக்கு 05 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  […]

ஆசியா

வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 ரோஹிங்கியா உட்பட 6 பேர் உயிரிழப்பு !

  • September 14, 2024
  • 0 Comments

வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்கிழக்கு காக்ஸ் பஜார் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பல குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டாக்காவில் இருந்து தென்கிழக்கே 392 கி.மீ. தொலைவில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் கடந்த வியாழக்கிழமை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூடுதல் அகதிகள் நிவாரண ஆணையர் முகமது ஷம்சுத்தூசா நயன் தெரிவித்தார். தற்போது […]

உலகம்

உணவுப் பஞ்சத்தால் சிக்கி தவிக்கும் சிம்பாப்வே – 200 யானைகளைக் கொல்ல திட்டம்

  • September 14, 2024
  • 0 Comments

சிம்பாப்வேயில் உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க 200 யானைகளைக் கொல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு 100,000 யானைகள் வாழ்கின்றன. அண்டை நாடான போட்ஸ்வானாவுக்குப் பிறகு உலகில் ஆக அதிகமான யானைகள் கொண்ட நாடு சிம்பாப்வேவாகும். சிம்பாப்வேயில் அளவுக்கு அதிகமான யானைகள் இருப்பதாக அந்நாட்டுச் சுற்றுப்புற அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறினார். மனிதர்களுடன் யானைகள் அதிகம் மோதும் இடங்களில் யானைகள் வேட்டையாடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அண்டை நாடான நமீபியா அண்மையில் 7000க்கும் அதிகமான வனவிலங்குகளைக் கொல்லவிருப்பதாக அறிவித்தது. அவற்றில் யானைகள், வரிக்குதிரைகள் […]

பொழுதுபோக்கு

விஜய்யின் கடைசி படத்தில் விஜய்க்கு 3 ஹீரோயின்களா? அதுவும் இவங்களா?

  • September 14, 2024
  • 0 Comments

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் 3 விஜய்யை காட்டி வெங்கட் பிரபு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்திருந்தார். கடந்த வாரம் வியாழனன்று வெளியான அந்த படம் முதல் 4 நாட்கள் அசுர வேட்டை நடத்தியது. செப்டம்பர் 14ம் தேதியான இன்று மாலை 5 மணிக்கு தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட உள்ள நிலையில், தளபதி 69 படத்தில் விஜய்யுடன் இணைந்து 3 முன்னணி நடிகைகள் நடிக்கப் போவதாக தகவல்கள் […]

உலகம் செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

  • September 14, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.61 அமெரிக்க டொலராக நிலவுகிறது. அத்துடன், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.65 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.30 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தென் அமெரிக்கா

தென் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள ஆபத்து

  • September 14, 2024
  • 0 Comments

தென் அமெரிக்க நாடுகளில் ஒரு வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான காட்டுத் தீ இந்த ஆண்டு பதிவாகியுள்ளது. செயற்கைக்கோள் தரவுகளின்படி, இந்த ஆண்டு 13 நாடுகளில் 3 லட்சத்து 46,112 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தென் அமெரிக்கா, பிரேசிலில் உள்ள அமேசான் காடுகள் முதல் பொலிவியாவில் உள்ள வறண்ட காடுகள் வரை, உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலங்கள் வழியாக காட்டுத்தீயால் அழிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தீ விபத்துகள் மனிதனால் ஏற்பட்டவை, மேலும் காலநிலை மாற்றத்தால் […]

ஆசியா

வியட்நாமில் யாகி புயல் – அதிகரிக்கும் மரணம் – 820 க்கும் மேற்பட்டோர் காயம்

  • September 14, 2024
  • 0 Comments

வியட்நாமில் யாகி புயல் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக ஏராளமானோர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு, மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் வியட்நாமின் வடகிழக்கு கடற்கரையைத் தாக்கிய இந்த சூறாவளி காரணமாக 820 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த ஆண்டு ஆசியாவைத் தாக்கும் வலிமையான புயல் இதுவாகும். மேலும், சுமார் 200,000 குழந்தைகள் தங்கள் வீடுகளை […]

செய்தி

மூளை கூர்மையாக வேலை செய்ய… கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்!

  • September 14, 2024
  • 0 Comments

நமது உடலின் தலைமைச் செயலகமாக செயல்படும் மூளை, உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மூளை சரியாக இயங்கினால் மட்டுமே நம்மால் இயல்பாக, ஆரோக்கியமாக இருக்க முடியும். அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது மூளை கூர்மையாக வேலை செய்ய, உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைச் செய்வது அவசியம். மனிதர்கள் எல்லோருக்கும் மூளை அமைப்பு என்பது ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் அது செயல்படும் விதத்தை வைத்துத்தான் ஒருவர் புத்திசாலியா, அறிவாளியா என்பது மதிப்பிடப்படுகிறது. மூளை […]

ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு விசேட அறிவிப்பு

  • September 14, 2024
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பவர்கள் வெளிநாடு செல்வதற்கு முன்னர் விசேட கவனம் செலுத்தி விசாக்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. நிரந்தர விசா வைத்திருப்பவர், வெளிநாடு செல்வதற்கு முன், தனது விசாவின் நிபந்தனைகள் மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு மீண்டும் நுழைவதற்கான அவர்களின் திறனைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய நிரந்தர குடியிருப்பாளர்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பும் போது விசா பிரச்சனைகளில் தொலைந்து போவதை தவிர்க்கும் வகையில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நிரந்தர விசா வைத்திருப்பவர் […]

வட அமெரிக்கா

ரஷ்யாவின் முன்னணி அரச ஊடகத்திற்கு தடை விதித்த அமெரிக்கா

  • September 14, 2024
  • 0 Comments

ரஷ்யாவின் முன்னணி அரச ஊடக நிறுவனமொன்றுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்துள்ள அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் என்டணி பிளிங்கன், RT ஊடகம் ரஷ்யாவின் உளவுத்துறை செயற்பாட்டின் ஒரு பிரிவு என விமர்சித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவில் ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும் ரஷ்யாவின் செயற்பாடுகளிலும் குறித்த ஊடகம் பங்குபற்றியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்கத் தேர்தலில் குறித்த ஊடகம் செல்வாக்கு செலுத்த முயன்றதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் யுக்ரைனுக்கு எதிராகப் போர் புரியும் ரஷ்ய இராணுவத்தினருக்காக நிதி […]