உலகம் செய்தி

ஈரானைத் தாக்கினால் எதிரிகளுக்கு மரண அடி: இராணுவத் தளபதி எச்சரிக்கை

ஈரான்மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்காவும் இஸ்ரேலும் இதுவரை எதிர்கொள்ளாத வகையில் மிகக் கடுமையான பதிலடிகளைச் சந்திக்க நேரிடும் என ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி எச்சரித்துள்ளார்.

ஈரான்மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்காவும் இஸ்ரேலும் இதுவரை எதிர்கொள்ளாத வகையில் மிகக் கடுமையான பதிலடிகளைச் சந்திக்க நேரிடும் என ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி எச்சரித்துள்ளார்.

ஈரானிய ஆயுதப் படைகள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) ஆகியவற்றுக்குத் தலைமை தாங்கும் அலி அப்தொல்லாஹி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரானின் இருப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் எந்தவொரு இடமும் சமச்சீரற்ற இராணுவ நடவடிக்கைகளின் நேரடித் தாக்குதல் இலக்காக மாற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஈரானின் உறுதியும் தொழில்நுட்பமும் மேம்பட்ட மேற்கத்திய பாதுகாப்பு உபகரணங்களின் தோல்வியை இந்தப் போர் நிரூபித்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடும் எதிரிகளின் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளுக்கு மத்தியிலும் ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான உற்பத்தித் தொழிற்துறைகள் தொடர்ந்து இயங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உற்பத்தி நடவடிக்கைகள் நிலத்துக்கு அடியில் ஆழமான பகுதிகளிலும் சுரங்கப் பாதைகளிலும் முன்னெடுக்கப்படுவதால், தாக்குதல்களுக்கு மத்தியிலும் உற்பத்தியைத் தொடர முடியும் என அலி அப்தொல்லாஹி கூறியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி