ஐரோப்பா

கிராகோ துப்பாக்கிச்சூடு எதிரொலி – போலந்தில் மாபெரும் பேரணி

போலந்தின்  கிராகோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு  சம்பவத்தால் ஏற்பட்ட அரசியல் பதற்றத்தின் பின்னணியில் தீவிர வலதுசாரி ஆதரவாளர்களால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக தலைநகர் வார்சாவில் கூடுதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

கிராகோவின் பிரதான சதுக்கத்தில் ஆறு பேரைக் கொன்ற நபர் தீவிர வலதுசாரி சித்தாந்தத்தால் தூண்டப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர்கள் கூறியதை தொடர்ந்து இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பிரதமர் டொனால்ட் டஸ்க் அமைதி காக்குமாறும், நிதானத்தை கடைப்பிடிக்குமாறும் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

“வார்சாவில் கூடவிருப்பவர்கள் உட்பட அனைவரிடமும்  நான் உரையாற்றுகிறேன். நாம் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம், ஒருவரையொருவர் கட்டுப்படுத்தலாம், சில சமயங்களில் அரசியல் எதிரிகளாகக் கூட இருக்கலாம்.

ஆயினும், போலந்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட எவரும், சுதந்திரம், விடுதலை மற்றும் ஒரு பாதுகாப்பான குடியரசால் வரையறுக்கப்பட்ட இந்த இடம் ஒரு பொது நன்மை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்