ஐரோப்பா செய்தி

ஐரோப்பாவில் 18 தாக்குதல்கள்: ஈரானின் சதித்திட்டம் குறித்து அமெரிக்கா பகீர் தகவல்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதாக, ஈரான் ஆதரவு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மூவருக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை எட்டு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதாக, ஈரான் ஆதரவு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மூவருக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை எட்டு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

குறிப்பாக, கடந்த செப்டெம்பர் மாதம் பிரித்தானியாவின் RAF Fairford விமானப்படைத் தளத்தை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் சதித்திட்டத்தில் இவர்கள் தொடர்புபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரானியரான மொஹ்சென் மொஹாஜெரி, ஈராக் நாட்டவரான மொஹமட் அலி அல்-ஹசானி மற்றும் ஈரான் – ஈராக் இரட்டைக் குடியுரிமை கொண்ட மொஹமட் பாக்கர் சாத் தாவூத் அல்-சாதி ஆகியோரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

குறித்த விமானப்படைத் தளத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான மூன்று வேன்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. வேன்களில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்படாத போதிலும், எரிபொருள் பீப்பாய்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தச் சதித்திட்டத்திற்காக வேன்கள், எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களைக் கொள்வனவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்காணிக்கப்பட்டதாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஐரோப்பாவில் இடம்பெற்ற 18 தாக்குதல்களுக்கு HAYI என்ற அமைப்பு பொறுப்பேற்றதாகவும், அவற்றில் ஏழு தாக்குதல்கள் பிரித்தானியாவில் இடம்பெற்றதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்துடன் ஈரானுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், அமெரிக்கக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளது.

இதற்கிடையில், குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து RAF Fairford விமானப்படைத் தளத்திலிருந்து தனது குண்டுவீச்சு விமானங்கள் அனைத்தையும் அமெரிக்கா மீளப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி