இத்தாலியில் உள்ள 300 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இத்தாலியில் உள்ள சுமார் 300 பாடசாலைகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா முழுவதும் சூப்பர் மார்க்கெட்டுகள், இரத்த வங்கிகள், விமானப் போக்குவரத்து மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தொடர்ச்சியான மிரட்டல்கள் மற்றும் சைபர் தாக்குதல்களின் நீட்சியாகவே இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இத்தாலிய கல்வி அமைச்சர் கியூசெப் வால்டிடாரா, இந்த மிரட்டல்கள் போலியானவை என்று கருதப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டார்.
இதேபோல் வடஅயர்லாந்தில் உள்ள பாடசாலைகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




