ஆசியா

கடனில் சிக்கி தவிக்கும் மாலைத்தீவு : உதவி கரம் நீட்டும் சீனா!

  • September 14, 2024
  • 0 Comments

கடனில் சிக்கித் தவிக்கும் மாலைத்தீவுக்கு கூடுதல் நிதியுதவி அளிக்க சீனாவும் மாலைதீவும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கவும் உதவும் என்று சீனா கூறுகிறது. இரு நாடுகளின் உள்ளூர் நாணயங்களில் நடப்புக் கணக்கு பரிவர்த்தனைகள் மற்றும் நேரடி முதலீடுகள் செய்யக்கூடிய அமைப்பை தயாரிப்பதன் மூலம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நாடுகளுக்கு இடையே முதலீடு மற்றும் வணிக வாய்ப்புகளை அதிகரிக்க வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த ஒப்பந்தம் […]

இந்தியா

Su-30SM போர் விமானங்களின் கடற்படையை மேம்படுத்த இந்தியாவின் உதவியை நாடும் ஆர்மீனியா!

  • September 14, 2024
  • 0 Comments

ரஷ்யாவால் கட்டமைக்கப்பட்ட Su-30SM போர் விமானங்களின் சிறிய கடற்படையை மேம்படுத்த ஆர்மீனியா இந்தியாவின் உதவியை நாடுகிறது. ஆர்மீனியா கவனிக்கும் Su-30 மேம்படுத்தல் ஏவியோனிக்ஸ், மின்னணு போர் தொகுப்புகள் மற்றும் ஆயுதங்களை உள்ளடக்கியது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) உதவியுடன்  Su-30 களை நவீனமயமாக்குவதை நாங்கள் பார்க்கிறோம் என்று ஆர்மீனியாவின் விமானப்படைத் துறையின் தலைவரான கர்னல் ஹோவன்னெஸ் வர்தன்யன் கூறியுள்ளார். எச்ஏஎல் நிறுவனம் நாசிக்கில் உள்ள அதன் விமான தயாரிப்பு பிரிவில் உரிமத்தின் கீழ் இந்திய விமானப்படைக்கு ரஷ்ய […]

உலகம்

உடலை டாட்டுவால் அலங்கரித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • September 14, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த 36 வயதான லினா லோரென்சன் என்ற பெண் தனது தோற்றத்தை முழுமையாக ‘human cyborg ஆக மாற்றியுள்ளார். இதற்காக  £156,000க்கு மேல் செலவழித்ததாக கூறியுள்ள அவர், 200க்கும் மேற்பட்ட பச்சைகளை குத்தியுள்ளார். மேலும் தனது எதிர்கால தோற்றத்தை நிறைவு செய்யும் முயற்சியில் தோலில் பல சப்டெர்மல் உள்வைப்புகளைச் செருகியுள்ளார். அவர் தனது ‘உடல் கலை’ பற்றி பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், தனது தோற்றத்தால் பல்வேறு சந்தர்ப்பங்களில் தான் மற்றவர்களிடம் இருந்து […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் nasal flu காய்ச்சல் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

  • September 14, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் இரண்டு மற்றும் மூன்று வயது குழந்தைகளின் பெற்றோர்களுக்கு nasal flu தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அரசாங்கம் வழங்கியுள்ளது. NHS இங்கிலாந்து செவ்வாய்கிழமை முதல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களைத் தொடர்புகொண்டு நாசி ஸ்ப்ரே தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தும் என தெரிவிக்க்பபட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் போன்ற பிற குழுக்கள் குளிர்காலத்திற்கு முன்னதாக இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் […]

வட அமெரிக்கா

ஸ்டார்மர், பைடன் இடையே பேச்சுவார்த்தை – உக்ரேனுக்கு எந்த உறுதிமொழியும் இல்லை

  • September 14, 2024
  • 0 Comments

பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உக்ரேன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாஷிங்டன் சென்றுள்ளார். அங்கு அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் உக்ரேன் நெடுந்தொலைவு ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யாவை தாக்குவதை அனுமதிப்பது தொடர்பாக எந்தவித உறுதிமொழியும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மரிடம் ரஷ்யாவுடனான போரில் உக்ரேன் நெடுந்தொலைவு ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனுக்கு அனுமதி அளிக்க பைடன் ஒப்புக்கொண்டாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஸ்டார்மர், “உக்ரேன் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ஓய்வூதியம் பெறுவோர் பஸ் பாஸ்களையும் இழக்க நேரிடலாம்!

  • September 14, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் குளிர்கால எரிபொருள் கொடுப்பனவுகளைக் குறைக்கும் தொழிற்கட்சியின் நடவடிக்கையைத் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் பஸ் பாஸ்களை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில் மில்லியன்கணக்கான முதியோர்களுக்கான குளிர்கால எரிபொருள் கொடுப்பனவுகளை தொழிற்கட்சி நீக்கியதால், அரசு ஓய்வூதியம் பெறுவோர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்த ஆண்டு, சுமார் 1.5 மில்லியன் தனிநபர்கள் மட்டுமே கட்டணத்தைப் பெறுவார்கள், ஏறத்தாழ 10 மில்லியன் ஓய்வூதியதாரர்கள் ஆண்டு நிதி உதவியின்றி £100 முதல் £300 வரை வெப்பச் செலவுகளுக்குச் […]

பொழுதுபோக்கு

நயன்தாராவுக்கு நடந்த விபரீதம்… பதறியடித்து சமூக வலைதளத்தில் பதிவு

  • September 14, 2024
  • 0 Comments

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. ரசிகர்களால் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாரா உலகளவில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் கலக்கி வந்த இவர் ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தி மொழியில் மாஸ் என்ட்ரி கொடுத்தார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தனது சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தனது டயட், தனது பிசினஸ் தொடர்பான விஷயங்கள், தனது குடும்பத்துடன் […]

கருத்து & பகுப்பாய்வு

போலந்தில் திகிலூட்டும் மரணச் சடங்கால் உயிரிழந்த சிறுவன் : மனித எச்சங்கள் மீட்பு!

  • September 14, 2024
  • 0 Comments

ஒரு காட்டுமிராண்டித்தனமான திகிலூட்டும் பழங்கால நடைமுறையை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஐரோப்பிய நகரமொன்றில் தொல்பொருள் ஆய்வாளர்கள் வாம்பயரின் சடலங்களை கண்டறிந்துள்ளனர். போலந்தின் செல்மில் உள்ள 13 ஆம் நூற்றாண்டு பிஷப் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இரண்டு நிலைகளால் குறிக்கப்பட்ட ஒரு புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. உள்ளே கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள், சிறுவனுடையது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவரின் கல்லறையில் பல திடுக்கிடும் தகவல்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சிறுவனின் எச்சத்தை  ஆய்வு செய்ததில் உடற்பகுதி முழுவதும் கற்களால் தரையில் அழுத்தப்பட்டுள்ளதை […]

உலகம்

குறைவான தீமைகளை கொண்ட கொள்கைகளை உடைய ஆட்சியாளரை தெரிவு செய்யுங்கள் – போப்!

  • September 14, 2024
  • 0 Comments

கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவரையும் விமர்சித்த போப், அமெரிக்க கத்தோலிக்கர்களிடம் “குறைவான தீமைகளை தனது கொள்கைளில் கொண்டிருக்கும் ஆட்சியாளரை (choose the lesser evil) தெரிவு செய்யுமாறு  கூறியுள்ளார். ஆசிய நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டிருந்த அவர், சிங்கப்பூரில் இருந்து ரோம் நகருக்கு புறப்படுகையில் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது கருக்கலைப்பு உரிமைகளை ஆதரிக்கும் துணை ஜனாதிபதி ஹாரிஸின் நிலைப்பாட்டை அவர் விமர்சித்தார். இந்த செயல்முறை ஒரு “கொலைக்கு சமம் என அவர் விமர்சித்துள்ளார். இதேவேளை மேலும் […]

பொழுதுபோக்கு

உலகளவில் GOAT திரைப்படம் செய்துள்ள வசூல்

  • September 14, 2024
  • 0 Comments

மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் GOAT. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருந்தார். விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக பிரஷாந்த், பிரபு தேவா, மோகன் ஆகியோர் நடித்திருந்தார். ஏற்கனவே வசீகரா படத்தின் மூலம் 90ஸ் கிட்ஸ் மனதில் இடம்பிடித்த ஆன் ஸ்க்ரீன் ஜோடியான விஜய் – சினேகா மீண்டும் GOAT படத்தில் இணைந்தனர். இவர்கள் மட்டுமின்றி மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி, லைலா என […]