ஆசியா

பங்ளாதேஷில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான இந்துக்கள்

  • September 14, 2024
  • 0 Comments

ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்களாதேஷின் டாக்காவிலும் சட்டோகிராமிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகியதிலிருந்து தங்கள்மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த அவர்கள் போராடிவருகின்றனர். மழையையும் பொருட்படுத்தாமல், எட்டு அம்சக் கோரிக்கைகளுடன் அவர்கள் பதாகைகளை ஏந்திச் சென்றனர். விரைவாகச் செயல்படும் தீர்ப்பாயம் மூலம் தாக்குதல்காரர்களுக்குத் தண்டனை விதிக்கப்படவேண்டும் என்பது கோரிக்கைகளில் ஒன்று. சமய நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் யாரும் எதுவும் செய்யக்கூடாது என்று தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தொலைக்காட்சி உரை ஒன்றில் நாட்டு மக்களுக்குத் […]

இந்தியா

இந்தியாவில் சிகரெட் தர மறுத்த கடைக்காரர் சுட்டுக்கொலை!!

  • September 14, 2024
  • 0 Comments

சிகரெட் விற்க மறுத்த மளிகைக்கடைக்காரரை அடையாளம் தெரியாத சிலர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது . அவ்வூரைச் சேர்ந்த சாரதா யாதவ், 55, கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 12) இரவு தம்முடைய மளிகைக்கடைக்கு வெளியே படுத்திருந்தார்.அப்போது, மோட்டார்சைக்கிளில் வந்த சிலர் அவரை எழுப்பி சிகரெட் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு, கடையின் சாவி வீட்டிற்குள் உள்ளது என்றும் நள்ளிரவு நேரத்தில் கடையைத் திறக்க முடியாது […]

இலங்கை

இலங்கை : வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது – பந்துல குணவர்த்தன!

  • September 14, 2024
  • 0 Comments

அடுத்த வருடம் முதல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றாலும், வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் பிரகாரம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதன்படி பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் முதலில் இறக்குமதி செய்யப்படும். வர்த்தக மற்றும் சரக்கு […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கண்டுப்பிடிக்கப்பட்ட சாமுராய் வாள் : ஆச்சரியத்தில் மூழ்கிய ஆய்வாளர்கள்!

  • September 14, 2024
  • 0 Comments

ஜெர்மனியின் தலைநகரான பெர்லினின் மையப்பகுதியில்  இரண்டாம் உலகப் போரின் குப்பைகளுக்கு மத்தியில் புதைக்கப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமையான சாமுராய் வாள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகரின் பழமையான சதுக்கமான மோல்கன்மார்க்கின் கீழ் இருந்த கட்டடம் அந்த காலப்பகுதியில் பாதாள அறையாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். போருக்குப் பிறகு, பாதாள அறையானது மேல் இருந்த கட்டடத்தின் இடிபாடுகளால் மறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  பின்னர் 1960 களில் தெருக்கள் விரிவுபடுத்தப்பட்டபோது சாலையின் அடியில் புதைக்கப்பட்டது. இந்நிலையில் மோல்கென்மார்க்கின் முன்னாள் பாதாள அறைகளை ஆய்வு […]

ஐரோப்பா

இன்னும் 03 மணி நேரத்தில் பிரித்தானியாவை தாக்கும் புயல்!

  • September 14, 2024
  • 0 Comments

மூன்று மணி நேரத்தில் பாரிய புயல் ஒன்று பிரித்தானியாவை தாக்கக்கூடும் என வானிலை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வென்டஸ்கியில் முன்னறிவிப்பாளர்களால் வெளியிடப்பட்ட வரைபடத்தில் UK இன் பெரும்பகுதி சிவப்பு, ஆரஞ்சு, பச்சை அல்லது நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இது புயல் தாக்கும் பகுதிகளை குறிக்கிறது. குறித்த புயலானது  50 மைல் வேகத்தில் காற்று வீசும் என்று கூறியது. தென்கிழக்கு இங்கிலாந்தின் ஒரு சறுக்கல் தவிர மற்ற எல்லா இடங்களிலும் ஈரமாக இருக்கும். நார்த் வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் […]

ஐரோப்பா

ஆளில்லா விமானம் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தும் ரஷ்யா!

  • September 14, 2024
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா ஆளில்லா விமானம் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனின் 12 தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் 76 ஆளில்லா விமான தாக்குதல்களில் 72 ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களால் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், ரஷ்யாவின் இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இதேவேளை, உக்ரைன் ஜனாதிபதி […]

இலங்கை

இலங்கையில் மயானம் ஒன்றிலிருந்து இருந்து ஆணொருவரின் சடலமொன்று கண்டுபிடிப்பு!

  • September 14, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயானம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர். தேற்றாத்தீவு மயானத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள குறித்த அடையாளம் காணப்படாத சடலத்திற்கு அருகாமையில் சமய வழிபாடுகள் இடம் பெற்றதற்கான தடையங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நரபலி பூஜைகள் எதுவும் நடாத்தப்பட்டதா என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் குறித்த பகுதிக்கு வந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் குற்றத்தடவியல் […]

ஐரோப்பா

சிலந்தி கடியால் அரிதான நோயால் பாதிக்கப்பட்ட பிரித்தானியர்!

  • September 14, 2024
  • 0 Comments

ஒரு சிலந்தி கடியால் பிரித்தானியர் ஒருவர் எதிர்கொண்ட அரிதான நோய் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நைஜல் ஹன்ட் என்ற பிரித்தானியர் ஒருவர் விடுமுறையில் சென்றபோது சிறிய சிலந்தியின் கடிக்கு இலக்காகியுள்ளார். ஆரம்பத்தில் சிறிய கடியாக இருந்தபோதிலும் பெரிய அளவிலான வலிகள் எதுவும் ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து விடுமுறையில் சென்றபோது அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவ உதவியை நாடிய அவர், பரிசோதனைகளை மேற்கொண்டார். இதில் ‘சதை உண்ணும் நோய்’ என்று அழைக்கப்படும் நெக்ரோடைசிங் […]

பொழுதுபோக்கு

விஜய்யின் கடைசி படம் குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது…

  • September 14, 2024
  • 0 Comments

விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தைய படமாக கோட் படம் வெளியானது, முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் ரூ. 350 கோடியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் விடுமுறை நாட்கள் வருவதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 13) விஜய்யின் கடைசி படத்தின் அறிவிப்பு இன்று வெளியாக இருப்பதாக எமோஷ்னலான வீடியோவுடன் அறிவித்தார்கள் விஜய்யின் கடைசி படமான அவரது 69வது படத்தை எச்.வினோத் தான் இயக்கப்போகிறாராம், […]

இலங்கை

இலங்கையில் இலஞ்ச ஊழல் தொடர்பில் 2000இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!

  • September 14, 2024
  • 0 Comments

இலங்கையில் இந்த  வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 2,142 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி , இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் 158 முறைப்பாடுகளும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 379 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. அத்துடன்,  சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்தமை தொடர்பில் 79 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இலஞ்சம் மற்றும்  ஊழல் தொடர்பில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் […]