இந்தியா செய்தி

அசாமில் நாளை இணைய சேவைகள் தற்காலிகமாக முடக்கம்

  • September 14, 2024
  • 0 Comments

மூன்றாம் வகுப்பு அரசுப் பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் ஆன்லைன் மோசடியைத் தவிர்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை மாநிலம் முழுவதும் மொபைல் இணையச் சேவைகள் நிறுத்தப்படுவதாக அசாம் அரசு அறிவித்துள்ளது. தேர்வின் போது ஏதேனும் முறைகேடுகளைத் தவிர்க்க, “இணையத்தை தற்காலிகமாக முடக்குவது விவேகமானது” என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 2,305 தேர்வு மையங்களில் 11,00,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். கடந்த காலங்களில் சில […]

உலகம் செய்தி

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து செய்தியாளர்களிடம் பேசிய சுனிதா வில்லியம்ஸ்

  • September 14, 2024
  • 0 Comments

அமெரிக்க வாழ் இந்திய விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளார். கடந்த ஜூன் 5ந்தேதி தனியார் நிறுவனமான போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளி சென்றார். 8 நாட்களில் பூமிக்கு திரும்புவதாக இருந்தது. ஸ்டார்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக திரும்ப முடியாமல் போனது. இதனால் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்ப உள்ளார். இந்த நிலையில் விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ மூலம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது “இது […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி ரணில் சென்ற ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கம்

  • September 14, 2024
  • 0 Comments

சுயேச்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சென்ற ஹெலிகொப்டர் அவசர தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று (14) பிற்பகல் எப்பாவல, கடியாவ வெல்யவில் தரையிறங்கியுள்ளது. ஹெலிகொப்டரின் தொழில்நுட்பக் கோளாறு தற்போது சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், அதனை மீளமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த ஹெலிகாப்டரை மீட்பதற்காக குழுவொன்று ஏற்கனவே சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இலங்கை செய்தி

புடின் எச்சரிக்கையை பைடன் நிராகரித்தார்

  • September 14, 2024
  • 0 Comments

ஜோ பைடன் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன், உக்ரைன் அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்துவதைப் பற்றி விவாதித்தார். பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். நிகழ்ச்சி நிரலில், ரஷ்யாவிற்குள் அமெரிக்க நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமா என்பது பற்றி. வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அந்தக் கேள்விக்கு உடனடியாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை. ஆனால் இந்த தலைப்பில் ரஷ்யாவின் எச்சரிக்கைகள், விவாதங்களில் […]

இந்தியா செய்தி

வைத்தியரின் அந்தரங்க உறுப்பை துண்டித்த தாதி

  • September 14, 2024
  • 0 Comments

இந்தியாவின் பீகாரின் தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த புதன்கிழமை இரவு (11) , தன்னை பலா த்காரம் செய்யவந்தவரின் அந்தரங்க உறுப்பை தாதி அறு த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் கங்காபூரில் உலா RBS ஹெல்த் கேர் என்ற மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து குடிபோதையில் அங்கு பணியாற்றி வந்த தாதியை பலா த்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய தாதி, […]

இலங்கை செய்தி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஏற்ற இலங்கை மதுவரித் திணைக்களம்

  • September 14, 2024
  • 0 Comments

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி தெரிவித்துள்ளார். மதுபானங்களை சில்லறைக்கு விற்பனை செய்யும் அனைத்து இடங்களும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மூடப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தி வட அமெரிக்கா

AUKUS இராணுவக் கூட்டணியில் இணைய திட்டமிடும் கனடா

  • September 14, 2024
  • 0 Comments

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ செல்வாக்கை எதிர்கொள்ள அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையே விரிவாக்கப்பட்ட AUKUS ஒப்பந்தத்தில் சேருவது குறித்து கனடா ஆலோசித்து வருவதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட புதிய இராணுவ தொழில்நுட்பங்களில் ஒத்துழைக்கும் AUKUS இல் சேர விரும்புவதாக கனடா தெரிவித்துள்ளது, ஆனால் அந்த பேச்சுக்களின் எந்த விவரங்களையும் இதுவரை வெளியிடவில்லை. AUKUS என்ற இராணுவக் கூட்டணி என்பது […]

இந்தியா செய்தி

உத்தரகாண்ட் நிலச்சரிவு – 30 தமிழர்கள் சிக்கி தவிப்பு

  • September 14, 2024
  • 0 Comments

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், தவாகாட்-தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் மலை பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் கீழே இறங்கி வர முயன்றபோது, வழியில் கற்கள் விழுந்தன. இதனால், அவர்கள் திரும்பி வர முடியாத நிலையில் உள்ளனர். இதனால், ஹெலிகாப்டர் மூலம் 30 பேரும் மீட்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் கடலூரின் சிதம்பரம் […]

செய்தி விளையாட்டு

முக்கிய தொடரில் இருந்து ரபேல் நடால் விலகல்

  • September 14, 2024
  • 0 Comments

லேவர் கோப்பை டென்னிஸ் தொடர் வரும் 20-ம் தேதி முதல் 22ம் தேதி வரை ஜெர்மனியில் உள்ள பெர்லினில் நடைபெற உள்ளது. இதில் பல முன்னணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த தொடரிலிருந்து விலகுவதாக ஸ்பெயின் முன்னணி வீரரான ரபேல் நடால் அறிவித்துள்ளார். இவர் கடைசியாக பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் விளையாடினார். அதன்பின் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம்

“இரண்டு தீமைகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்” – போப் பிரான்சிஸ்

  • September 14, 2024
  • 0 Comments

டொனால்ட் ட்ரம்பின் புலம்பெயர்ந்தோருக்கான கொள்கை, கருக்கலைப்பு உரிமைக்கான கமலா ஹாரிஸின் ஆதரவினை மேற்கோள் காட்டி, இரண்டு அமெரிக்க அதிபர் வேட்பாளர்களையும் வாழ்க்கைக்கு எதிரானவர்களாக தான் கருதுவதாக” போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். தனது 12 நாட்கள் ஆசிய பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் ரோம் திரும்பியபோது செய்தியாளர்களிடம் பேசிய போப், “இருவரும் வாழ்க்கைக்கு எதிரானவர்கள். அவர்களில் ஒருவர் புலம்பெயர்ந்தோர்களை நிராகரிப்பவர், மற்றொருவர் குழந்தைகளைக் கொல்பவர். நான் ஒரு அமெரிக்கர் இல்லை. நான் அங்கு வாக்களிக்கப் போவதும் இல்லை. ஆனால் […]