உலகம் செய்தி

அணுசக்தி நிலையங்களில் கிம் ஜாங்-உன்

  • September 15, 2024
  • 0 Comments

வடகொரியா அணு ஆயுதங்களை வைத்திருப்பதை நீண்ட காலமாக வெளியுலகிற்கு உணர்த்தி வருகிறது. இப்போது நாடு ஆயுதங்களின் உற்பத்தியைப் பற்றிய நுண்ணறிவைக் கொடுக்கும் புதிய படங்களைப் பகிர்ந்து கொள்கிறது. வட கொரியாவின் அரசுக்கு சொந்தமான செய்தி நிறுவனமான KCNA வெளியிட்ட புகைப்படங்களில், அணு உற்பத்தி ஆலையை சுற்றி கிம் ஜாங்-உன் வலம் வருகிறார். வடகொரியா அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் பலமுறை தடைகளை விதித்துள்ளது. இருப்பினும்,வடகொரியாவிற்கான ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட புதிய தடைகளை […]

உலகம் செய்தி

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

  • September 15, 2024
  • 0 Comments

ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் மத்திய இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவுவதில் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வடக்கு ஏமனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூதி போராளிகள் பெரும் விலை கொடுக்க நேரிடலாம் என்று கூறியுள்ளார். அப்பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இவ்வாறான தாக்குதலை முன்னெடுத்த முதல் தடவையாக இன்றைய (15) தாக்குதலை குறிப்பிடலாம். இந்த தாக்குதலுக்கு 2,040 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் […]

இலங்கை செய்தி

தெஹிவளை பகுதியில் துப்பாக்கிச் சூடு

  • September 15, 2024
  • 0 Comments

தெஹிவளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். போதைப்பொருள் வியாபாரியான தரிந்து லக்ஷன் என்ற 24 வயதுடைய நபருக்கே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா செய்தி

இட்லியால் பறிபோன உயிர்

  • September 15, 2024
  • 0 Comments

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாலக்காட்டில் நடத்தப்பட்ட உணவு உண்ணும் போட்டியின் போது, லொறி டிரைவர் ஒருவர் தொண்டையில் இட்லி சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக இட்லி சாப்பிடுவது, அதிக பரோட்டா சாப்பிடுவது, அதிக முட்டை சாப்பிடுவது, அதிக பிரியாணி சாப்பிடுவது, குறைந்த நேரத்தில் அதிகம் சாப்பிடுவது என போட்டிகளை விதம் விதமாக நடத்துகின்றனர். இப்படி நடத்தப்படும் போட்டிகளில் பரிசுக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பங்கேற்பவர்கள் ஏராளம். அதிலும், பணம் கிடைக்கிறது என்று ஆசைப்பட்டு போட்டியில் கலந்து […]

உலகம் செய்தி

இந்தியாவில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட இரண்டு ரஷ்ய தம்பதிகள்

  • September 15, 2024
  • 0 Comments

ஹரித்வாரில் இரண்டு ரஷ்ய தம்பதிகள் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். திருமணமானது அகண்ட் பரம் தாம் ஆசிரமத்தில் நடைபெற்றது, இதில் தம்பதிகள் வேத கீர்த்தனைகள் மற்றும் புனிதமான நெருப்பைச் சுற்றி ஏழு சுற்றுகள்முடித்தல் உள்ளிட்ட இந்திய பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொண்டனர். திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் மூன்று குழந்தைகளுடன் இருக்கும் தம்பதியினர், இந்து முறைப்படி தங்கள் திருமணத்தை செய்ய விரும்பியதால் தற்போது அதனை பூர்த்தி செய்துள்ளனர். “இந்திய கலாச்சாரத்தின் மீதான அவர்களின் அபிமானம், தங்கள் சபதங்களை இங்கே புதுப்பிக்க […]

இலங்கை செய்தி

தியாக தீபத்தின் நினைவேந்தல் ஆரம்பம்

  • September 15, 2024
  • 0 Comments

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 37வது நினைவு தினம், இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், மாவீரர் றொஷானின் தாயார் இரத்தினசிங்கம் பொற்கொடியால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திலீபனின் உருவப்படத்திற்கு முன்னாள் போராளி ஒருவர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் பலரும் உணர்வு […]

இலங்கை செய்தி

யாழில் நாய்க்கு இறுதிக்கிரியை செய்து , உடல் நல்லடக்கம்

  • September 15, 2024
  • 0 Comments

கடந்த பத்தாண்டு காலமாக தனது வீட்டினை காவல் காத்து வந்த நிலையில் உயிரிழந்த பைசா என அழைக்கப்படும் நாய்க்கு , வீட்டின் உரிமையாளர் இறுதிக்கிரியை செய்து , உடலை நல்லடக்கம் செய்துள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு 08ஆம் மாதம் 20ஆம் திகதி பிறந்த பைசா என பெயர் சூட்டப்பட்ட நாய்க்குட்டியை அதனது 08ஆவது வயதில் இருந்து, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வளர்த்து வந்துள்ளார். கடந்த பத்தாண்டு காலமாக பைசாவை அவர் வளர்த்து வந்துள்ளார். […]

இந்தியா செய்தி

புயலால் பாதிக்கப்பட்ட மூன்று நாடுகளுக்கு உதவிய இந்தியா

  • September 15, 2024
  • 0 Comments

மியான்மர், லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா, ஒரு பெரிய சூறாவளியின் பாதிப்பைக் கையாள்வதில் அவர்களுக்கு உதவ ‘சத்பவ்’ என்று பெயரிடப்பட்ட நடவடிக்கையின் கீழ் அவசர நிவாரணப் பொருட்களை அனுப்பியது. மியான்மர், லாவோஸ் மற்றும் வியட்நாமின் பல்வேறு பகுதிகள் இந்த ஆண்டு ஆசியாவின் மிக சக்திவாய்ந்த புயல் என்று கூறப்படும் யாகி புயல் தாக்கியதையடுத்து பாரிய வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன. இந்திய கடற்படை கப்பலான INS சத்புரா கப்பலில் மியான்மருக்கு உலர் உணவு, உடைகள் மற்றும் […]

செய்தி விளையாட்டு

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இருந்து முக்கிய இங்கிலாந்து வீரர் விலகல்

  • September 15, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருாள் தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியதை அடுத்து, அந்த அணியின் கேப்டனாக ஹாரி புரூக் செயல்படவுள்ளார். வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜோஸ் பட்லர் டி20 மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டிலும் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதேபோன்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

கையில் குழந்தை – கணவருக்கு உதட்டுடன் முத்தம்… முதன்முறையாக வெளியான படங்கள்

  • September 15, 2024
  • 0 Comments

நடிகை அமலா பாலுக்கு ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இலை என்று அமலா பால் பெயர் வைத்து இருக்கிறார். குழந்தை பிறந்த பின்னும் இணையத்தில் கணவரோடு இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வந்த அமலா பால், ஓணம் பண்டிகையொட்டி தனது குழந்தையின் போட்டோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ரோமன் […]