ஐரோப்பா

ஸ்பெயினில் வீட்டுவசதி நெருக்கடிக்கு எதிராக மாபெரும் போராட்டம்

ஸ்பெயினில் நிலவும் வீட்டுவசதி நெருக்கடிக்கு எதிராக, தொழிலாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்பெயினின் மிகப்பெரிய தொழிற்சங்கங்களான UGT மற்றும் CCOO ஆகியவற்றுடன், பிற தொழிலாளர் அமைப்புகள் மற்றும் வாடகைதாரர் சங்கங்கள் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளன.

வாடகை உயர்வு மற்றும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் சம்பவங்களால் ஆத்திரமடைந்த மக்கள் கடந்த ஆண்டுகளில் இல்லாத மாபெரும் போராட்டத்தை புயலுக்கு மத்தியிலும் முன்னெடுத்துள்ளனர்.

இந்த நாட்டின் வீட்டுவசதி மாதிரியை முழுமையாக மாற்றியமைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். வீடுகள் என்பவை ஒரு சிறு வர்க்கத்தினர் லாபம் ஈட்டும் கருவியாக இருக்கக்கூடாது; அவை மக்கள் வாழ்வதற்கான இடங்களாக இருக்க வேண்டும்” என்று மாட்ரிட் வாடகைதாரர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்த மாபெரும் போராட்டம் ஆளும் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும் தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக போக்குவரத்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்