ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் இருந்து முக்கிய இங்கிலாந்து வீரர் விலகல்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருாள் தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியதை அடுத்து, அந்த அணியின் கேப்டனாக ஹாரி புரூக் செயல்படவுள்ளார்.
வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜோஸ் பட்லர் டி20 மற்றும் ஒருநாள் தொடர் என இரண்டிலும் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகி இருக்கிறது.
இதேபோன்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதன் காரணமாக ஆல்-ரவுண்டர் வீரரான லியம் லிவிங்ஸ்டன் 15 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிக்கு லிவிங்ஸ்டன் முக்கிய காரணமாக செயல்பட்டார்.