ஐரோப்பா

இத்தாலி கடற்பகுதியில் மூழ்கிய படகு : 07 பேர் மாயம்!

  • August 19, 2024
  • 0 Comments

22 பேரை ஏற்றிச் சென்ற ஆங்கிலக் கொடியுடன் கூடிய பாய்மரப் படகு தெற்கு இத்தாலியில் உள்ள சிசிலி கடற்கரையில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதில் ஏழு பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 04 பிரித்தானியர், இரு கனேடியர், மற்றும் ஒரு அமெரிக்கர் மாயமானதாக கூறப்படுகிறது. கடலோர காவல்படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒரு வயது குழந்தை உட்பட 15 பேரை அவசரகால சேவைகள் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையின் போது சிசிலியை சூறாவளி தாக்கியதால் படகு மூழ்கியதாக […]

ஆசியா

கோடைகால அலைகளுக்கு மத்தியில் தென்கொரியாவில் கழிவு நீரில் கொவிட்-19 கிருமி அளவு அதிகரிப்பு

  • August 19, 2024
  • 0 Comments

தென்கொரியாவில் ஆகஸ்ட் மாதத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கழிவு நீரில் கொவிட்–19 கிருமியின் அளவும் அதிகரித்திருப்பதாகத் தென்கொரிய சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகஸ்ட் 18ஆம் திகதியன்று தெரிவித்தனர்.இந்த நிலை ஆகஸ்ட் மாத இறுதியில் உச்சம் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கழிவுநீரில் கொவிட்-19 கிருமியின் அளவை அளவுகோலாகக் கொண்டு அந்நோயால் ஏற்பட்டுள்ள பாதிப்பு கணிக்கப்படுகிறது.இந்த அணுகுமுறை 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நடப்பில் உள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்கும் ஆகஸ்ட் மாத தொடக்கத்துக்கும் இடைப்பட்ட […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சாரங்களுக்கு முக்கிய கொடிகளை பயன்படுத்த தடை!

  • August 19, 2024
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் அலுவலகங்களை தயார்படுத்துவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலும் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதச் சின்னங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

தளபதி விஜய்க்கு போட்டியாக ஸ்ரீதேவி மகள் செய்த வேலை…

  • August 19, 2024
  • 0 Comments

நடிகர் விஜய் தான் வைத்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை சமீபத்தில் விற்றுவிட்டார். அதன் பின் புதிதாக ஒரு சொகுசு காரை வாங்கி இருந்தார். லெக்சஸ் LM என்ற சொகுசு காரை சுமார் 2.5 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தார் விஜய். அதன் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. நடிகர் விஜய் ரூ. 2.50 கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் இளைய தளபதி விஜய். […]

இலங்கை

உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை – விழிப்புடன் இலங்கை

  • August 19, 2024
  • 0 Comments

இலங்கையானது குரங்கம்மை நோய் தொடர்பில் விழிப்புணர்வை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உலகளாவிய ரீதியில் குரங்கம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. குரங்கம்மை நோயை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனம் செய்துள்ளது. குரம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகளாவாக பதிவாக வில்லை. தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயலில் இருப்பதால் நோய் தாக்கம் தொடர்பில் அச்சுறுத்தல் குறைவாக உள்ளது. எனினும், கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க சுகாதார அமைச்சகம் கலந்தாசோசித்து […]

ஆசியா

சிங்கப்பூரில் தமிழ் இளைஞன் உட்பட 177 பேருக்கு குடியுரிமை

  • August 19, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் தமிழ் இளைஞன் உட்பட 177 பேருக்கு அந்த நாட்டின் குடியுரிமை நேற்று வழங்கப்பட்டது. சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் குடியுரிமை விழா நடத்தப்படும். அப்போது அந்த நாட்டில் வந்து குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இந்த நிலையில், நடந்த விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த பொறியாளர் சுதன் வின்சென்ட் உள்பட 177 பேருக்கு சிங்கப்பூரின் குடியுரிமை சான்றிதழை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் பாலகிருஷ்ணன்,‘‘ ஒவ்வொருவருக்கும் தனித்துவம்வாய்ந்த திறமைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி நமது […]

ஐரோப்பா

ஸ்பெயினில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த கதி – தீவிர விசாரணையில் பொலிஸார்

  • August 19, 2024
  • 0 Comments

ஸ்பெயினில் காற்பந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பமவ் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூரான பொருளால் குத்தி சிறுவனை கொன்றதாக நம்பப்படும் நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு வயது 11 என்று தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சிறுவன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது முகந்தெரியாத ஒருவரால் தாக்கப்பட்டார் என்று நம்பப்படுகிறது. ஸ்பெயினின் மத்திய பகுதியில் இருக்கும் டொலெடொ நகருக்கு அருகே நேற்று காலை அந்தச் சம்பவம் நடந்தது. சுமார் 18 வயதுடைய சந்தேக நபர் சம்பவ […]

ஆசியா

பங்களாதேஷில் மூடப்பட்ட பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு

  • August 19, 2024
  • 0 Comments

பங்களாதேஷில் மூடப்பட்ட பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலை ஒதுக்கீட்டு முறையை சீர்திருத்தக் கோரி நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் மோதல்கள் இடம்பெற்றது. இதன் காரணமாக கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். பங்களாதேஷில் ஒரு மாதத்துக்கும் மேலாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

செய்தி

இலங்கை அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வழங்கிய ஜனாதிபதி

  • August 19, 2024
  • 0 Comments

இலங்கை அரச பணியாளர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை அடுத்த வருடம் 25,000 ரூபாவாக அதிகரிக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். நாட்டின் எதிர்காலம் கருதியே அனைத்து கட்சிகளும் இன்று ஒன்றிணைந்துள்ளோம். சிலிண்டர் விலை 6,000 ரூபாய் வரை உயரும் போது சஜித், அனுர போன்றவர்கள் எங்கே இருந்தனர் என்று கூற வேண்டும். அதற்கான பதிலை அவர்கள் வழங்கவில்லையாயின் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பொருத்தமற்றவர்களாவர். இந்த நாட்டின் பொருளாதாரத்தை சஜித்தோ அனுரவோ மீள கட்டியெழுப்பவில்லை. அடுத்த வருடத்தில் அரச […]

செய்தி வாழ்வியல்

கருஞ்சீரகம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?

  • August 19, 2024
  • 0 Comments

கருஞ்சீரகத்தின் பக்க விளைவுகள் மற்றும் அதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கருஞ்சீரகத்தால் குணப்படுத்த முடியாத நோய்களை இல்லை என்று கூறலாம் .பல வகையான புற்று நோய்களுக்கு கருஞ்சீரகத்திலிருந்து தான் மருந்து தயாரிக்கப்படுகிறது. கருஞ்சீரகத்தில் 97 சதவீதம் நன்மை இருந்தாலும் 3% பக்க விளைவுகளும் உள்ளது. அளவுக்கு அதிகமாக தொடர்ந்து பலமுறை எடுத்துக் கொண்டாலோ அல்லது பல வியாதி இருப்பவர்கள் எடுத்துக் கொண்டாலும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். கருஞ்சீரகத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? […]

error: Content is protected !!