ஆஸ்திரேலியா செய்தி

mpox வைரஸ் குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

  • August 19, 2024
  • 0 Comments

உலகளவில் mpox தொற்று அதிகரித்து வருவதால், அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் ஆஸ்திரேலியர்களை அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நோய் பரவல் காரணமாக உலக சுகாதார நிறுவனமும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் இரண்டு வகையான mpox வைரஸ் பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடுகளில் புதிய வைரஸ் பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் கடந்த புதன்கிழமை mpox ஐ உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. தற்போதைய வெடிப்பு 2022 ஆம் ஆண்டு பொது […]

ஆசியா

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

  • August 19, 2024
  • 0 Comments

டோக்கியோவின் வடகிழக்கே ஜப்பானின் இபராக்கி பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை உள்ளூர் நேரப்படி 0:50 மணிக்கு இந்த அதிர்வு உணரப்பட்டதனையடுத்து மகக்ள் அச்சதமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தின் மையம் 36.7 வடக்கு அட்சரேகை மற்றும் 140.6 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன. ஜப்பான் சமீபத்தில் “மெகாஷாக்” ஏற்படக்கூடிய எச்சரிக்கையை வெளியிட்டது, ஆனால் ஒரு வாரம் கழித்து எச்சரிக்கையை நீக்கியது. ஆகஸ்ட் […]

விளையாட்டு

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் – பாட் கம்மின்ஸ் எடுத்த முக்கிய தீர்மானம்

  • August 19, 2024
  • 0 Comments

பார்டர் கவாஸ்கர் டிராபி 2024-25 போட்டிகள் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இரண்டு அணிகளின் ரசிகர்களும் இந்த தொடருக்காக காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 2 மாதம் ஓய்வு எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாட இந்த ஓய்வு தேவை என்று குறிப்பிட்டுள்ளார். 1992க்குப் பிறகு முதல் முறையாக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா இந்தியாவை எதிர்கொள்கிறது. இதனால் தன்னை மீண்டும் உற்சாகப்படுத்த […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsAppஇல் நீண்ட நாட்கள் காத்திருந்த புதிய அம்சம் அறிமுகம்

  • August 19, 2024
  • 0 Comments

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் இப்போது பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த ஷேட் விண்டோஸ் கஸ்டம் தீம் அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. WABetaInfo, கூறுகையில் பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஷேட் விண்டோஸ்களில் தீம், கலரை மாற்றி வகையில் அம்சம் வருகிறது. வாட்ஸ்அப் செட்டிங்கிஸில் “Chat theme” என்ற பக்கத்தில் Message colour மற்றும் Wallpaper என்ற […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

  • August 19, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கமலா ஹாரிஸை, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனை காட்டிலும் கமலா ஹாரிஸை தம்மால் சுலபமாக வீழ்த்திவிட முடியும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில், தீவிர இடதுசாரியைபோல் கமலா ஹாரிஸ் பேசிவருவதாக கூறிய டிரம்ப், கடும் விலைவாசி உயர்வுக்கு ‘தோழி’ கமலா ஹாரிஸ் தான் காரணம் என்றும் விமர்சித்தார். மேலும் கமலா ஹாரிஸை விட தாம் […]

ஐரோப்பா செய்தி

துருக்கியில் பற்றி எரியும் காட்டுத்தீ – 80 பேர் பாதிப்பு – நூற்று கணக்கான மக்கள் வெளியேற்றம்

  • August 19, 2024
  • 0 Comments

துருக்கி ஏகன் கரையில் காட்டுத்தீ பற்றி எரிவதாக தெரியவந்துள்ளது. இதனால் அங்கு வாழும் சுமார் 900 பேர் வீடுகளைவிட்டு வெளியேறியிருக்கின்றனர். அந்தப் பகுதியில் மூன்றாவது நாளாகத் தீ கொளுந்துவிட்டு எரிகிறது. நாடு முழுக்க ஏற்பட்டிருக்கும் 6 காட்டுத்தீச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடுகின்றனர். தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. காட்டுத்தீயால் சுமார் 80 பேர் பாதிக்கப்பட்டதாகத் துருக்கியே சுகாதார அமைச்சு கூறியது. அவர்களில் சுமார் 30 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சுமார் 1,600 ஹெக்டர் […]

இலங்கை

இலங்கையில் டெங்கு நோய் தொற்று அச்சுறுத்தல் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • August 19, 2024
  • 0 Comments

இலங்கையில் டெங்கு நோய் அதிகரிக்கக் கூடிய நிலைமை உள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நிலவும் மழையுடனான காலநிலைக் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 34, 906 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, மேல் மாகாணத்தில் இதுவரையில் 14, 248 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த வருடத்தின் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர். […]

ஐரோப்பா செய்தி

அச்சுறுத்தும் குரங்கு அம்மை – ஆபத்தை தடுக்க தயாராகும் பிரான்ஸ்

  • August 19, 2024
  • 0 Comments

ஆபிரிக்க நாடுகளை அச்சுறுத்தும் குரங்கு அம்மை தற்போது ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் அடையாளம் காணப்பட்டுள்ளமையில் பல நாடுகள் தயாராகி வருகின்றது. அதை அடுத்து பிரான்ஸிற்குள்ளும் இந்த அம்மை நோய் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஆசிய நாடான பாக்கிஸ்தானில் கண்டறியப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் ஸ்வீடனில் இந்த குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பாவுக்குள் தொற்று நுழைந்ததை அடுத்து, பிரெஞ்சு மக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்கும்படி பிரெஞ்சு சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. குரங்கு அம்மை […]

ஆசியா செய்தி

இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனை தொடர்பாக ராஜினாமா செய்த பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அதிகாரி

  • August 18, 2024
  • 0 Comments

பயங்கரவாதத்திற்கு எதிராகப் பணியாற்றிய பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அதிகாரி ஒருவர் இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து அரசாங்கம் “போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். மார்க் ஸ்மித் சக ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் , அவர் வெளியுறவு அலுவலகத்தில் “ஒவ்வொரு மட்டத்திலும்” கவலைகளை எழுப்பியதாகக் தெரிவித்தார், டப்ளினில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பணிபுரியும் ஸ்மித், அடிப்படை ஒப்புகைகளைத் தவிர வேறு எதுவும் தனக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கான மத்திய கிழக்கு […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் குத்திக் கொலை

  • August 18, 2024
  • 0 Comments

ஸ்பெயினில் கால்பந்து மைதானத்தில் 11 வயது சிறுவனை கூரிய பொருளால் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார் தேடி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நபர் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது முகமூடி அணிந்த நபர் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மத்திய ஸ்பெயினில் உள்ள டோலிடோ நகருக்கு அருகில் உள்ள மொசெஜோனில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. சந்தேக நபர், 18 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். ரோந்துப் படையினர் […]

error: Content is protected !!