ஐரோப்பா

ஸ்பெயினில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த கதி – தீவிர விசாரணையில் பொலிஸார்

ஸ்பெயினில் காற்பந்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பமவ் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூரான பொருளால் குத்தி சிறுவனை கொன்றதாக நம்பப்படும் நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு வயது 11 என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சிறுவன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது முகந்தெரியாத ஒருவரால் தாக்கப்பட்டார் என்று நம்பப்படுகிறது.

ஸ்பெயினின் மத்திய பகுதியில் இருக்கும் டொலெடொ நகருக்கு அருகே நேற்று காலை அந்தச் சம்பவம் நடந்தது.

சுமார் 18 வயதுடைய சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீவிரமாக நடைபெறும் தேடும் பணியில் ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்