இலங்கை

இலங்கையில் தபால் தலை (Stamp) விலை அதிகரிப்பு!

  • June 19, 2024
  • 0 Comments

இலங்கையில் தபால்தலை ஒன்றின் குறைந்தபட்ச விலையை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார். இதனை அமுல்படுத்த கருவூலத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக அவர் கூறினார். 2022 வரை 15 ரூபாயாக இருந்த முத்திரையின் குறைந்தபட்ச விலை தற்போது 50 ரூபாயாக உள்ளது. தபால் திணைக்களம் தொடர்ச்சியாக நஷ்டம் அடைந்து வருவதனால் இந்த தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்கா

அமெரிக்கர்களை மணந்த அகதிகளுக்கு நிரந்த குடியுரிமை ; அதிபர் ஜோ பைடன்

  • June 19, 2024
  • 0 Comments

உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் ஏராளமான அகதிகள் அந்த நாட்டவர்களை மணந்திருந்தால் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் திட்டத்தை அதிபர் ஜோ பைடன் வகுத்துள்ளார்.இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை மனதில் கொண்டே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக கருதப்படுகிறது. இது குறித்து வெள்ளை மாளிகை புதன் கிழமூ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளதாவது, உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருப்பவர்கள், அமெரிக்கர்களின் கணவர் அல்லது மனைவியாக இருந்தால் அவர்கள்நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் […]

பொழுதுபோக்கு

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் திடீர் மரணம்

  • June 19, 2024
  • 0 Comments

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் முன்னாள் மருமகனும், ஸ்ரீஜாவின் முன்னாள் கணவருமான சிரிஷ் பரத்வாஜ் காலமானார். மிக இளம் வயதிலேயே ஷிரிஷ் பரத்வாஜ் இறந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிரிஷும் – ஸ்ரீஜாவும் காதலித்து வந்த நிலையில் தங்கள் பெற்றோரை எதிர்த்து 2007 இல் திருமணம் செய்து கொண்டனர். 2014ல் ஸ்ரீஜா ஷிரிஷை விவாகரத்து செய்தார். அதன் பிறகு இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார்கள். இந்நிலையில், ஸ்ரீஜாவின் முதல் கணவர் நுரையீரல் நோயால் இன்று காலை […]

ஐரோப்பா

நேரடி முதல்வர் தேர்வுக்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ள இத்தாலிய செனட்

  • June 19, 2024
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்று நாட்டின் தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் அரசாங்க மசோதாவுக்கு இத்தாலிய செனட் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவின் உறுதியான ஆதரவாளரான பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கருத்துத் தெரிவிக்கையில், “ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான முதல் படி இது, நமது நிறுவனங்களுக்கு ஸ்திரத்தன்மையைக் கொடுக்கும், அரண்மனை விளையாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மற்றும் குடிமக்களுக்கு யார் ஆட்சி செய்வது என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மீண்டும் அவர்களுக்கு வழங்கும் என்று தெரிவித்தார். செனட்டில் எதிர்க்கட்சியான பசுமை மற்றும் இடது […]

இலங்கை

இலங்கை வந்தடைந்த கிரிக்கெட் அணியினர் – கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரம்

  • June 19, 2024
  • 0 Comments

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர். இன்று காலை சுமார் 8.40 மணியளவில் EK-650 Emirates விமானம் மூலம் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். வரலாற்றில் முதல் தடவையாக இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்றுப் போட்டியின் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்ட இலங்கை அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்த பின்னணியில், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ‘சில்க் ரூட்’ […]

செய்தி

இலங்கையில் பாரிய விபத்தில் இருந்து தப்பிய குடும்பம்

  • June 19, 2024
  • 0 Comments

இலங்கையில் பாரிய விபத்தில் இருந்து குடும்பம் ஒன்று காயமின்றி தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஹொரணையில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த குடும்பம் ஒன்று பயணித்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் குயில்வத்தை பகுதியில் இன்று அதிகாலை 5.15 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காரின் சாரதி தூங்கியதால், கார் வீதியை விட்டு விலகி தேயிலை தோட்டம் ஒன்றிற்குள் புகுந்துள்ளது. இவ்விபத்தில் […]

வாழ்வியல்

40 வயதை நெருங்கும் பெண்களா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • June 19, 2024
  • 0 Comments

மெனோபாஸ் பற்றியும் மெனோபாஸின் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மெனோபாஸ் என்றால் என்ன? மெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் முடிவு காலம் ஆகும். இது ஒரு இயற்கையான நிகழ்வாகும் .இதை தவிர்க்க முடியாது. 40 வயதை கடந்த அனைத்து பெண்களுமே சந்திக்க வேண்டிய ஒரு நிகழ்வாகும். அறிகுறிகள்; 40 வயதை நெருங்கும் பெண்கள் மற்றும் 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்கள் ஏற்படும். […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அரசுக்கு எந்த வரியும் செலுத்தாமல் ஏமாற்றும் 102 கோடீஸ்வரர்கள்

  • June 19, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் 102 கோடீஸ்வரர்கள் அரசுக்கு எந்த வரியும் செலுத்தவில்லை என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் (ATO) வெளியிட்ட புதிய தரவுகளின்படி, 100க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் ஒரு மில்லியன் டொலருக்கு மேல் சம்பாதித்தவர்கள் 2021-2022 நிதியாண்டில் வரி செலுத்தவில்லை. ஒரு மில்லியன் டொலருக்கு மேல் சம்பாதித்தவர்கள் ஆனால் வரி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அந்த நிதியாண்டில் 102 ஆக உயர்ந்துள்ளது என்பதை சமீபத்திய வருடாந்திர வரி புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. கடந்த நிதியாண்டில் செலுத்தப்படாத வரிகளின் எண்ணிக்கை […]

செய்தி

ஹஜ் யாத்திரையில் இணைந்த சுமார் 550 யாத்திரிகர்கள் மரணம்

  • June 19, 2024
  • 0 Comments

இவ்வருடம் ஹஜ் யாத்திரையில் இணைந்த சுமார் 550 யாத்திரிகர்கள் கடும் வெப்பமான காலநிலையினால் ஏற்பட்ட பல்வேறு நோய்களினால் உயிரிழந்துள்ளனர். அதிக வெப்பம் காரணமாக மேலும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பநிலை 50 பாகை செல்சியஸிற்கு மேல் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இறந்தவர்களில் எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான் மற்றும் செனகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 550 யாத்ரீகர்களும் அடங்குவர். இந்நிலைமையினால் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ள பெருமளவிலான பதிவு […]

விளையாட்டு

நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் எடுத்த திடீர் தீர்மானம்

  • June 19, 2024
  • 0 Comments

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக வில்லியம்சன் அறிவித்துள்ளார். அதோடு, கிரிக்கெட் வாரியத்துடனான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இனி நியூசிலாந்து அணிக்காக பெரும்பாலும் வில்லியம்சன் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார் என கருதப்படுகிறது. ஐசிசியின் நடப்பு டி20 உலகக் கோப்பையில் லீக் சுற்றிலேயே நியூசிலாந்து அணி வெளியேறிய நிலையில், வில்லியம்சன் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக, டி20 உலகக் கோப்பை போட்டிகளில் […]

error: Content is protected !!