காஸாவில் உணவு விற்பனைக்கு அனுமதி வழங்கிய இஸ்ரேல் ராணுவம்
காஸாவில் உள்ள மக்களுக்கு உணவு விற்க விதிக்கப்பட்டு இருந்த தடையை இஸ்ரேலிய ராணுவம் விலக்கி உள்ளது. ராஃபா நகரில் சண்டை நீடித்து வருவதால் அனைத்துலக மனிதாபிமான உதவிகள் தடைபட்டு இருக்கும் நிலையில் இஸ்ரேலில் இருந்தும் மேற்குக் கரையில் இருந்தும் உணவுப்பொருள்கள் காஸாவைச் சென்று அடைவதற்கான வழி மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. பழங்கள், காய்கறிகள், பால் மாவு போன்றவற்றை இஸ்ரேல், பாலஸ்தீன விநியோகிப்பாளர்களிடம் இருந்து காஸா வர்த்தகர்கள் மீண்டும் வாங்க இஸ்ரேலிய ராணுவம் பச்சைக்கொடி காட்டி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு […]













