செய்தி விளையாட்டு

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 2 போட்டி நடத்த விரும்பும் ICC?

  • June 1, 2024
  • 0 Comments

டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொண்டு பங்கேற்க உள்ளது. மேலும், அந்த 20 அணிகளும் தலா ஐந்தைந்து அணிகளாக பிரிக்க பட்டு மொத்தம் 4 பிரிவாக (Group) உள்ளனர். அந்தந்த பிரிவுகளில் இருக்கும் அணிகள் தங்களுக்குள் மோதிக்கொள்ள வேண்டும். இறுதியில் முதலில் இடம் பிடிக்கும் 2 அணிகள் அடுத்த சுற்றன சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறுவார்கள். இதில் குரூப்-ஏ (Group -A) பிரிவில் இந்தியாவும், பாகிஸ்தானும் இடம் பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Instagramஇல் அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்!

  • June 1, 2024
  • 0 Comments

பலருக்கும் பிடித்த ஆப்பான இன்ஸ்டாகிராம், புதிய அம்சமாக ஒரு அப்டேட்டை கொண்டுவந்துள்ளது. வாட்ஸ்அப், மெஸ்ஸேன்ஜருக்கு அடுத்தபடியாக அதிக பயனர்களால் உபயோகிக்கப்படுவது இன்ஸ்டாகிராம் தான். இந்த இன்ஸ்டாகிராமில் ஒரு பெரிய இடையூறாக இருந்தது தான் யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்பி கொள்ளலாம் என்பது தான். இந்த ஒரு இடையூர் காரணமாக பல பெண்கள், பல பிரபலங்கள், பல பல நூதன மோசடிகளும் நடைபெற்றது. தற்போது, அதற்கு இன்ஸ்டாகிராம் முற்று புள்ளி வைத்துள்ளது. அதாவது, இனி நமக்கு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் முடிவால் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • June 1, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலிய மாணவர் கடன் பெற்றவர்களின் கடன் தொகையை இன்று முதல் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, செலுத்தப்படாத உயர்கல்வி கடன்கள் (HECS-HELP) உள்ளவர்கள் தங்கள் கடன் மதிப்பு 4.7 சதவீதம் அதிகரிப்பதைக் காண்பார்கள். கடந்த ஆண்டு, மாணவர் கடன்கள் 7.1 சதவிகிதம் உயர்ந்தன, இது 30 ஆண்டுகளில் மிகப்பெரிய அதிகரிப்பாகும். இன்று இடம்பெறும் மாற்றங்கள் உயர்கல்வி கடனில் சுமையாக உள்ள 2.9 மில்லியன் மக்களுக்கு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது. சராசரியாக 26,494 […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் உணவு பற்றாக் குறை – அழிந்து வரும் ஹம்போல்ட் பென்குயின்கள்

  • June 1, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் ஹம்போல்ட் பென்குயின்கள்அழிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் செஸ்டர் உயிரியல் பூங்காவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 11 ஹம்போல்ட் பென்குயின்கள் பிறந்துள்ளன. தாய் பென்குயின்கள் மீன்களை விழுங்கி,வயிற்றில் செமித்து ஆக்கப்பட்ட கரைசலை மீண்டும் வாய் பகுதிக்கு கொண்டுவந்து குஞ்சுகளுக்கு ஊட்டிவருவதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர். தென் அமெரிக்க கடற்கரை பகுதிகளில் வசித்துவரும் இந்த சிறிய வகை பென்குயின்கள், மீனவர்கள் அதிகளவில் நெத்திலி மீன்களை பிடித்துவிடுவதால் உணவின்றி வேகமாக அழிந்துவருகின்றன.

ஐரோப்பா

ஜெர்மனியில் கணவனால் பாதிக்கப்படும் பெண்கள் – அதிகாரிகளுக்கு வரும் அழைப்புகள்

  • June 1, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பாரியளவு அதிகரித்துள்ளதாக பெண்களுக்கு ஆதரவாக இயங்குகின்ற அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அதாவது 2023 ஆம் ஆண்டு இவ்வாறு 59000 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு வன்முறை சம்பவங்கள் ஏற்படும் பொழுது இவர்கள் விசேட தொலை தொடர்பு இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் வன்முறைகளை முறையீடு செய்ய முடியும். இந்நிலையில் மத்திய தொலை தொடர்பு நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு 59000 இவ்வாறு பதிவுகள் கிடைக்கபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது […]

ஆசியா செய்தி

வடகொரியாவின் குப்பை பலூன் அச்சத்தில் தென்கொரியா!

  • June 1, 2024
  • 0 Comments

வடகொரியாவிலிருந்து இன்று முதல் குப்பைகள் நிறைந்த மேலும் பல பலூன்கள் வந்துசேரும் என்று எதிர்பார்ப்பதாக தென்கொரியா குறிப்பிட்டுள்ளது. பழுதடைந்த மின்கலன்கள், சிகரெட் துண்டுகள், உரம் முதலியவை அடங்கிய சுமார் 260 பலூன்களை வடகொரியா செவ்வாய், புதன்கிழமைகளில் தென்கொரியாவுக்கு அனுப்பியது. மனிதநேயமற்ற அந்த நடவடிக்கை, தரந்தாழ்ந்த ஒன்று என்று சோலின் கூட்டுப்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார். வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் அடங்கிய பலூன்களைத் தென்கொரிய ஆர்வலர்கள் அந்நாட்டு எல்லைக்கு அனுப்பியிருந்தனர். அதற்குப் பதிலடியாகவே […]

இலங்கை செய்தி

இலங்கையில் வாகனங்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

  • June 1, 2024
  • 0 Comments

இலங்கையில் வாகனங்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் வாகன இறக்குமதி செய்யப்பட்டாலும் விலை குறைக்கப்படாதென வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும், அதற்கான உரிய திகதி குறித்த அறிவிப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், வாகன இறக்குமதி மேற்கொள்ளப்பட்டாலும் வாகனங்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.