பொழுதுபோக்கு

இலங்கை சென்றதும் சிங்களப் பெண்ணாக மாறிய ஆல்யா மானசா.. கொழும்பில் உல்லாசம்

  • June 16, 2024
  • 0 Comments

சின்னத்திரையின் கியூட்டான நட்சத்திர ஜோடி ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். சீரியல் நடிப்பது மட்டும் இல்லாமல் நிறைய போட்டோ ஷுட்களில் கலந்துகொள்வது, தனியார் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக செல்வது, நிறைய ஆடை மற்றும் நகை கடைகளை விளம்பரப்படுத்துவது என இருவருமே தொடர்ந்து அதற்கான விஷயங்களை செய்கிறார்கள். இந்த நிலையில் இலங்கையில், தனியார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ள போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள இவர்கள் வருகைத்தந்துள்ளார்கள். இதன்போது கொழும்பில் பிரபல 5Star ஹோட்டலில் இவர்கள் தங்கியுள்ளார்கள். இவர்கள் […]

ஐரோப்பா

யூரோ 2024 கால்பந்து போட்டியை காண திரண்ட இரசிகர்கள் மத்தியில் பதற்றம் : பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

  • June 16, 2024
  • 0 Comments

யூரோ 2024 கால்பந்து போட்டியை காண பெரும்பாலான இரசிகர்கள் நேற்று (15.06) குவிந்திருந்த நிலையில், கலவரம் வெடித்துள்ளது. நேற்றைய போட்டியில்  இத்தாலியும் அல்பேனியாவும் மோதியபோது டார்ட்மண்ட் மற்றும் பெர்லின் ஆகிய இரு இடங்களிலும் வன்முறைகள் வெடித்துள்ளன. 100 அல்பேனிய அல்ட்ராக்கள் கருப்பு உடை அணிந்து இத்தாலிய ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் நடவடிக்கை பின்னர் கலவரமாக மாறியதை அடுத்து அதனை கட்டுப்படுத்த பொலிஸாரும், கலக தடுப்பு பிரிவினரும் தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். மைதானத்திற்கு வெளியேயும், […]

ஆசியா

வலுப்படும் சீனாவிற்கும் – ஆஸ்திரேலியாவிற்குமான உறவு!

  • June 16, 2024
  • 0 Comments

சீனப் பிரதமர் லீ கியாங்கின் ஆஸ்திரேலியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். இதன்போது இருதரப்பு உறவின் நேர்மறையான அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  முக்கியமாக இதில் ராட்சத பாண்டாக்கள் மற்றும் மீண்டும் வளரும் மது வர்த்தகம் ஆகியவை அடங்கும். பாண்டாக்கள் மிருகக்காட்சிசாலையின் நட்சத்திர ஈர்ப்பாக இருப்பதை உறுதி செய்ததற்காக வெளியுறவு மந்திரி பென்னி வோங் லிக்கு நன்றி தெரிவித்தார். இது பொருளாதாரத்திற்கு நல்லது, இது தெற்கு ஆஸ்திரேலிய வேலைகளுக்கு நல்லது, இது சுற்றுலாவிற்கு நல்லது, மேலும் இது நல்லெண்ணத்தின் சமிக்ஞையாகும் […]

உலகம்

உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட உலகளாவிய முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜப்பான் பிரதமர்

  • June 16, 2024
  • 0 Comments

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யா,உக்ரைனில் தொடரும் சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு எதிராக உக்ரைனில் நீடித்த அமைதியை அடைய உலகளாவிய முயற்சிகளுக்கு ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அழைப்பு விடுத்துள்ளார். பலாத்காரம் அல்லது வற்புறுத்தல் மூலம் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியும் நியாயப்படுத்தப்படக்கூடாது என்று கிஷிடா சனிக்கிழமையன்று உக்ரைனில் நடந்த சர்வதேச உச்சிமாநாட்டில் தனது உரையில் கூறினார். ரஷ்ய அல்லது சீன இருப்பு இல்லாமல் 90 க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பங்கேற்புடன் இரண்டு […]

ஆசியா

சிங்கப்பூரின் கடற்கரைக்கு செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

  • June 16, 2024
  • 0 Comments

சிங்கப்பூரின் தெற்கு கடற்கரையோரப் பகுதி முழுவதும் எண்ணெய் கசிவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. நெதர்லாந்தின் கொடியுடன் கூடிய வோக்ஸ் மாக்சிமா என்ற அகழ்வாராய்ச்சி கப்பலானது, சிங்கப்பூரின் எரிபொருள் விநியோகக் கப்பலான மரைன் ஹானர் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. குறித்த எண்ணெய் கசிவானது பிரபல ரிசார்ட் தீவுயான சென்டோசா உட்பட, பல இடங்களுக்க பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பொது பூங்கா மற்றும் இயற்கை காப்பகத்தில் உள்ள கடற்கரையின் ஒரு பகுதி சுத்தம் செய்யும் […]

ஐரோப்பா

கிரேக்க தீவில் மர்மமான முறையில் மாயமான அமெரிக்க பிரஜை!

  • June 16, 2024
  • 0 Comments

கிரேக்க தீவில் நிலவும் வெப்பநிலை காரணமாக பலர் இனந்தெரியாத முறையில் இறப்பதாக கூறப்படுகிறது. பிரித்தானியாவின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் மாயமாகியிருந்த நிலையில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தை போல்  கிரேக்கத் தீவில் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போனதாக கூறப்படுறிது. கோர்புவின் மேற்கே அமைந்துள்ள மாத்ராகி தீவில் உள்ள ஒரு உணவகத்தில் செவ்வாய்க்கிழமை கடைசியாகக் காணப்பட்ட பின்னர், அடையாளம் தெரியாத நபர் வியாழக்கிழமை முதல் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விசாரணைகளை […]

பொழுதுபோக்கு

திடீரென மொட்டையடித்த நடிகை – எப்படி இருக்காங்கனு பாருங்க…

  • June 16, 2024
  • 0 Comments

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஹீரோயினின் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரண்யா. அப்படம் அவரது கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார் சரண்யா. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு, இப்படத்துக்கு பின்னர் நடிகை சரண்யாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. பின்னர் மழைக்காலம் என்கிற திரைப்படத்தில் சோலோ ஹீரோயினாக அறிமுகமானார் சரண்யா. இப்படத்தை தீபன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தின் பணிகள் கடந்த […]

ஆசியா

ஜப்பானின் காடுகளில் கைவிடப்பட்ட பழமையான கார்கள்!

  • June 16, 2024
  • 0 Comments

ஜப்பானில் நூறாயிரக்கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள கைவிடப்பட்ட மற்றும் பாழடைந்த வாகனங்கள் நிறைந்த கிளாசிக் கார்களுக்கான கல்லறையை ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். டெய்ம்லர், ட்ரையம்ப்ஸ், எம்ஜி, மோரிஸ் மைனர் மற்றும் தீயணைப்பு வாகனம் உட்பட ஒரு காலத்தில் அதிநவீன விண்டேஜ் ஆட்டோமொபைல்களால் நிரம்பியிருக்கும் புதையல் இது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த காரின் விலை £200,000 மதிப்புடையதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 1984 டென்னிஸ் SS135 ஃபயர் என்ஜின் மற்றும் இரண்டு பழங்கால ட்ரையம்ப்கள் உள்ளன, இதில் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் சிறுவர் நீர் விளையாட்டு திடலில் துப்பாக்கி சூடு சம்பவம் – 9 பேர் படுகாயம்

  • June 16, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள, சிறுவர்களுக்கான நீர் விளையாட்டுத் திடலில் சனிக்கிழமை (ஜூன் 15) துப்பாக்கிக்காரர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோரில் ஒரு குழந்தையும் அடங்கும் என்று காவல்துறை தெரிவித்தது. ‘புரூக்லேண்ட்ஸ் பிளாசா ஸ்பிளாஷ் பேட்’ எனும் நீர் விளையாட்டுத் திடலில் நடந்த சம்பவம் குறித்து சனிக்கிழமை மாலை 5 மணியளவில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறை கூறியது. துப்பாக்கிக்காரர் வாகனத்திலிருந்து இறங்கி, நீர் விளையாட்டுத் திடலை அணுகி சுடத் தொடங்கியதாகவும் […]

இலங்கை

இலங்கையில் ரயிலில் பயணித்த வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த கதி

  • June 16, 2024
  • 0 Comments

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற உடரட்ட மெனிகே ரயிலில் பயணித்த வெளிநாட்டு யுவதி ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். ரயில் பாதையில் உள்ள சுரங்கத்தில் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் 23 வயதுடைய பிலோஸ் அனஸ்தாசியா என்ற உக்ரைன் யுவதியே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்த இவர் குடும்பத்தாருடன் எல்ல பகுதிக்கு ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது, ஒஹியா மற்றும் பட்டிபொல ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள சுரங்க பாதையில் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளதாக […]

error: Content is protected !!