ஆசியா

தனது உள் போர் அமைச்சரவையை கலைத்த நெதன்யாகு!

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஆறு பேர் கொண்ட போர் அமைச்சரவையை கலைத்துள்ளார் என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது மத்தியவாத முன்னாள் ஜெனரல் பென்னி காண்ட்ஸின் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய பின்னர் வந்த பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்கையாகும். பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் போர் அமைச்சரவையில் இருந்த மூலோபாய விவகார அமைச்சர் ரான் டெர்மர் உள்ளிட்ட அமைச்சர்கள் அடங்கிய சிறிய குழுவுடன் காசா போர் குறித்து நெதன்யாகு ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

ஐரோப்பா

விவாகரத்து கோரிய மனைவி… ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள இங்கிலாந்து நபர்

  • June 17, 2024
  • 0 Comments

தம் மனைவி விவாகரத்து கோருவதற்கு ஆப்பிள் நிறுவனம்தான் காரணம் என்று கூறி வழக்கு தொடுத்துள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர். தமது ஐஃபோன்வழி பாலியல் தொழிலாளர்களுக்குக் குறுந்தகவல் அனுப்பி, சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்துவந்த அந்த நபர், குறுந்தகவல்கள் அனைத்தையும் கைப்பேசியிலிருந்து நீக்கிவிட்டார்.ஆனால், அவரது ஐஃபோனுடன் இணைக்கப்பட்ட ஐமேக் கணினியில் அந்த நீக்கப்பட்ட குறுந்தகவல்கள் இருந்துள்ளனன. குடும்பத்தில் அனைவரும் பயன்படுத்தும் அந்த ஐமேக்கில் செயலி ஒன்றை இயக்கிய இன் நபரின் மனைவி, தம் கணவர் கடைசியாக ஒரு பாலியல் […]

இந்தியா

குடிபோதையில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்த இந்திய ராணுவ வீரர்..!

  • June 17, 2024
  • 0 Comments

ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த தன் மீது ராணுவ வீரர் சிறுநீர் கழித்ததாக பெண் ஒருவர் இணையம் வழி பிரதமர் அலுவலகத்திலும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடமும் புகார் அளித்துள்ளார். குடிபோதையில் பெண் மீது ராணுவ வீரர் சிறுநீர் கழித்தது தெரியவந்துள்ளது. டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு படுக்கை வசதி கொண்ட விரைவு ரயிலில் தனது 7 வயது குழந்தையுடன் பெண் ஒருவர் பயணம் செய்துகொண்டிருந்தார். அவர் ரயிலின் கீழ் அடுக்கு படுக்கையில் தனது மகளுடன் அயர்ந்து தூங்கிக் […]

இலங்கை

வாடகை வருமான வரி : இலங்கை நிதி அமைச்சகம் விளக்கம்!

  • June 17, 2024
  • 0 Comments

வாடகை வருமான வரி குறித்து விளக்கம் அளித்து நிதி அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்போடு நடைமுறைப்படுத்தப்பட்ட விரிவான நிதி வசதித் திட்டம் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச சொத்து வரியானது ‘கட்டண வாடகை வருமான வரி’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் சமூகத்தில் பல்வேறு தவறான கருத்துக்கள் எழுந்துள்ளமை உரிய அறிவிப்பில் காணப்படுகின்றது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரி விதிப்பில் […]

ஐரோப்பா

தொழிலாளர் கட்சி பிரித்தானியாவிற்கு ஆபத்தானது – கிராண்ட் ஷாப்ஸ் எச்சரிக்கை!

  • June 17, 2024
  • 0 Comments

பிரித்தானிய தொழிலாளர் கட்சியானது ஆட்சிக்கு வந்தால் அதிகளவிலான வரியை அறிமுகப்படுத்தும் என பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். அடுத்த நாடாளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 72 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கிராண்ட் ஷாப்ஸிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் இன்னும் யாரும் வாக்களிக்கவில்லை என்றும், கருத்துக்கணிப்புகள் அந்த நேரத்தில் ஒரு ஸ்னாப்ஷாட் தான் என்றும் கூறியுள்ளார். தொழிற்கட்சி அரசாங்கம் “இந்த நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது […]

பொழுதுபோக்கு

அர்ஜுன் மகள் திருமணத்தில் ஷாலினி மற்றும் அனோஷ்கா.. வைரல் புகைப்படம்

  • June 17, 2024
  • 0 Comments

ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் ஜூன் 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பிரமாண்டமாக நடந்து முடிந்த இந்த திருமணத்திற்கு திரையுலக சேர்ந்த பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் வருகை தந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த வரிசையில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்காவும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் […]

கருத்து & பகுப்பாய்வு

தொழிலை இழக்கும் மில்லியன் கணக்கானோர் : AI இன் தலையீடு இல்லாத 05 தொழில்களை பார்கலாமா?

  • June 17, 2024
  • 0 Comments

ChatGPT போன்ற பிரபலமான செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அறிமுகப்படுத்தியதில் இருந்து, இந்த நாட்களில் ஒவ்வொரு பயன்பாட்டிலும் AI அம்சம் உள்ளது. AI ஆனது, நமது மின்னணு சாதனங்களுடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இது சிக்கல்களைத் தீர்க்கும் மற்றும் மின்னல் வேகத்தில் பணிகளைச் செய்ய முடியும் என்பதுடன், சாதாரணமாக மனிதர்கள் செய்யும் வேலைகளை விட 03 மடங்கு அதிக வேலைகளை துரித கதியில் செய்ய முடியும். இருப்பினும் இந்த தொழில்நுட்பத்தை அதிகமான தொழில்களில் ஏற்றுக்கொண்டால் […]

உலகம்

ஜப்பான் செல்லும் வழியில் பழுதடைந்த நியூசிலாந்துப் பிரதமரின் விமானம்

  • June 17, 2024
  • 0 Comments

நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன் ஜப்பானுக்குப் பயணம் செய்த ராணுவ விமானம் ஜூன் 16ஆம் திகதி செயலிழந்ததை அடுத்து, அவர் வர்த்தக விமானத்தில் பயணத்தைத் தொடர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. நியூசிலாந்துப் பிரதமர் அலுவலகம், ஜூன் 17ஆம் திகதி இந்தத் தகவலை உறுதிசெய்தது. லக்சன் நான்கு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ளார். தமது பயணத்தின்போது அவர், ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிதாவைச் சந்தித்துப் பேசுவார் என்றும் நியூசிலாந்தின் வர்த்தக வாய்ப்புகளைப் பெருக்கும் முயற்சிகளை மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. […]

ஆஸ்திரேலியா

நடுவானில் தீப்பிழம்புகளை வெளியேற்றிய விமானம் : மரணத்தை கண்முன் பார்த்த பயணிகள்!

  • June 17, 2024
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கு பயணித்த விமானம் இடைநடுவில் தீ பிடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விர்ஜின் விமானம் VA148 – 737 மெல்பேர்னுக்கு பயணித்த போது எதிர்பாராத விதமாக என்ஜினில் இருந்து தீ வெளியேறியுள்ளது. இதனையடுத்து நிலைத்தடுமாறிய விமானி விமானத்தை திசை திருப்பி இன்வர்கார்கில் தரையிறக்கியுள்ளார். இதில் விமானி உள்பட பலர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவைக் கடக்கும் போது விமானம் தீப்பிழம்புகளை வீசத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை விமான நிறுவனம் […]

வட அமெரிக்கா

கலிஃபோர்னியா காட்டுத் தீயில் 12,000 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பு சேதம்

  • June 17, 2024
  • 0 Comments

லாஸ் ஏஞ்சலிசின் வடமேற்குப் பகுதியில் மூண்டுள்ள காட்டுத் தீயால் ஜூன் 16ஆம் திகதி 1,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.புகழ்பெற்ற வெளிப்புறக் கேளிக்கைப் பகுதியிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். காட்டுத் தீயால் 12,000 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பு கருகியதாக அதிகாரிகள் கூறினர். தீயணைப்பாளர்கள் ஏறக்குறைய 400 பேர், 7 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். தீயில் இரண்டு சதவீதம் மட்டுமே அவர்கள் கட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஜூன் 15ஆம் திகதி பிற்பகலில் மூண்ட தீ, […]

error: Content is protected !!