இலங்கையில் தலையில் தேங்காய் விழுந்ததில் 11 மாத குழந்தை பலி..!
தேங்காய் ஒன்று தலையில் விழுந்ததில் 11 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர். கலஹா, தெல்தோட்டை பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கலஹா தெல்தோட்டை நாரன்ஹின்ன தோட்டத்தில் வசிக்கும் லோகேஸ்வரன் கியாங்ஷினி என்ற சிறுமியே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். தந்தை சிறுமியை பக்கத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, வீட்டின் முன்புறம் முப்பது அடி தூரத்தில் இருந்த தென்னை மரத்தில் இருந்து காய்ந்த காய் ஒன்று அவள் தலையில் விழுந்தது. பின்னர் சிறுமியை முச்சக்கர […]













