இலங்கை செய்தி

கொழும்பில் பாரிய தீ விபத்து – கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு படையினர்

  • June 17, 2024
  • 0 Comments

மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் தீ பரவியுள்ளது. இன்று காலை 10.10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், சொத்து சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பொழுதுபோக்கு

“படம் வேற மாதி இருக்கும்” விடாமுயற்சி குறித்து அர்ஜூன் இப்படி சொல்லிட்டாரே…

  • June 17, 2024
  • 0 Comments

இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படம் தொடர்பாக டைட்டில் லுக் தவிர வேறு எந்தவிதமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது. இந்த நிலையில், […]

இந்தியா

இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்து – 5 பேர் பலி – 25 பேர் காயம்

  • June 17, 2024
  • 0 Comments

இந்தியாவின் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று காலை இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் சமிக்ஞையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அஸ்ஸாமில் உள்ள சில்சாரில் இருந்து கொல்கத்தாவில் உள்ள சீல்டாவுக்கு ரங்கபாணி நிலையம் அருகே செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், பின்னால் வந்த சரக்கு ரயில் மோதியதாகவும், எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு நெருக்கடி – Bank of England விடுத்த அவசர எச்சரிக்கை

  • June 17, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவு நெருக்கடி தீவிரமடைந்து வருவதால், அடமான நிலுவை தொகைகள் உயரும் என்று மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. Bank of Englandஇன் அறிக்கைக்கமைய, நிலுவையில் உள்ள அடமான நிலுவைகளில் கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இது தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் அதிக வீட்டு உரிமையாளர்கள் அடமானக் கொடுப்பனவுகளைத் தொடர சிரமப்படுவதைக் குறிக்கிறது. 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான வங்கியின் தரவுகளின்படி, முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், நிலுவையில் உள்ள அடமான நிலுவைகள் […]

ஐரோப்பா

ஐரோப்பாவின் மிக மோசமான கடவுச்சீட்டாகிய பிரித்தானிய கடவுச்சீட்டு

  • June 17, 2024
  • 0 Comments

பிரித்தானிய கடவுச்சீட்டு ஐரோப்பாவில் மிக மோசமான ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது. பணத்திற்கான மதிப்பு என்ற பிரிவிற்குள் வரும்போது பிரித்தானிய கடவுச்சீட்டு பின்தங்கிய நிலையில் உள்ளது. PR agency Tankஇன் புதிய ஆய்விற்கமைய, பிரித்தானிய கடவுச்சீட்டு பணத்திற்கான மதிப்புக்கு ஐரோப்பாவில் மிக மோசமான ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 131 நாடுகளின் கடவுச்சீட்டுகளின் விலை, கடவுச்சீட்டு எத்தனை ஆண்டுகள் செல்லுபடியாகும், மற்றும் விசா இன்றி எந்த நாடுகளுக்கு செல்ல முடியும் என்பதை கணக்கிட்டு, அதன் விலையை ஒப்பிட்டு இந்த […]

வாழ்வியல்

தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவரா நீங்கள்? நிம்மதியான தூக்கத்தை பெற 5 வழிகள்

  • June 17, 2024
  • 0 Comments

ஆரோக்கியமான வாழ்க்கை முறை கடைபிடிப்பதில் தூக்கமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தூக்கம் என்பது உடல் மற்றும் மன சுகாதாரத்தை பராமரிக்க உதவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவருக்கு போதுமான தூக்கம் இருந்தால் மட்டுமே உடலின் சரியான செயல்பாட்டிற்கும், மனதின் சமநிலையையும் பாதுகாப்பாக இருக்கும். இல்லையெனில் பெரிய பாதிப்பிற்கு வழிவகுக்ககூடும். தூக்கம் உடலின் உடல் மற்றும் நரம்பியல் முறைகளை புதுப்பிக்க உதவுகிறது. இதன் மூலம், வளர்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன, இதனால் உடல் நன்கு பராமரிக்கப்படுகிறது. இதை தவிர, சரியான அளவு […]

ஐரோப்பா

பிரித்தானிய அரசுக்கு கோடிஸ்வரரான இலங்கை தமிழரால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • June 17, 2024
  • 0 Comments

தொலைத்தொடர்பு நிறுவனமான Lycamobile UK இன் கணக்குகளை கணக்காய்வாளர்கள் கையொப்பமிட முடியவில்லை என அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் டோரி நன்கொடையாளர்களான Lycamobile நிறுவனத்தின் 150 மில்லியன் பவுண்ட் தனிப்பட்ட கடன்கள் காரணமாக கணக்குகளை அங்கீகரிக்க கணக்காய்வாளர்கள் மறுத்துவிட்டனர். முன்னாள் டோரி நன்கொடையாளர் அல்லிராஜா சுபாஸ்கரனுக்குச் சொந்தமான மொபைல் நிறுவனமான லைகாமொபைலின் கணக்குகள் கிட்டத்தட்ட 150 மில்லியன் பவுண்டுகள் தனிநபர் கடனாக இருப்பதால் கணக்காய்வாளர்கள் கவலை தெரிவித்தனர். சைப்ரஸ், டுபாய் மற்றும் சிங்கப்பூரில் உள்ள தொடர்புடைய நிறுவனங்களின் […]

மத்திய கிழக்கு

சவுதியில் உச்சக்கட்ட வெப்பம் – ஹஜ் யாத்திரையில் 14 பேர் மரணம் – 17 பேர் மாயம்

  • June 17, 2024
  • 0 Comments

சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரையின்போது வெப்பம் தாங்காமல் 14 யாத்திரீகர்கள் உயிரிழந்துள்ளனர். ஜோர்த்தானிய யாத்திரீகர்களே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மேலும் 17 பேரைக் காணவில்லை என்று ஜோர்த்தானிய வெளியுறவு அமைச்சு கூறியிருக்கிறது. காணாமல் போனவர்கள் தேடப்படுகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது அல்லது சொந்த ஊருக்கு அனுப்புவது உள்ளிட்ட விவகாரங்களைச் சவுதி அதிகாரிகளுடன் பேசி வருவதாக அமைச்சு கூறியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரின் கோரிக்கைக்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கிடையே 5 ஈரானிய யாத்திரீகர்களும் உயிரிழந்துள்ளனர். ஆனால் அவர்களின் […]

விளையாட்டு

ரோஹித் சர்மாவுடன் பிரச்சனை? சுப்மன் கில் கொடுத்த விளக்கம்

  • June 17, 2024
  • 0 Comments

ரோஹித் ஷர்மாவுடன் பிரச்சனை என்ற தகவல் பரவிய நிலையில், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியீட்டு சுப்மன் கில் விளக்கம் கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் மாற்று வீரர்களால் ஒருவராக இடம்பெற்றுள்ள சுப்மன் கில் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக இந்தியாவுக்கு திரும்ப இருப்பதாக சமீபத்தில் விமர்சனங்கள் எழுந்தது. அது மட்டுமின்றி, சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்டன் ரோஹித் ஷர்மாவை பாலோவ் செய்து இருந்த […]

இலங்கை செய்தி

கொழும்பில் மிகப்பெரிய குழாய் சேதம் – பல பகுதிகளுக்கு நீர் விநியோகிக் முடியாத நிலை

  • June 17, 2024
  • 0 Comments

கொழும்பு ஹைலெவல் வீதியின் கொடகம பகுதியில் நீர் விநியோகம் செய்யும் பெரிய குழாய் சேதமடைந்துள்ளது. இன்றுஅதிகாலை லபுகம நீர்த்தேக்கத்தில் நீரை விநியோகம் செய்யும் பெரிய குழாயில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மோதியதில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நீர் குழாயில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் பாரியளவு நீர் வௌியேறி வருகின்றது. இது குறித்த இடத்தில் உள்ள மின்கம்பமும் உடைந்து வீதியில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் சிக்கிய கார் சாரதி உட்பட இருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் […]

error: Content is protected !!