இலங்கை

இலங்கை – ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை

  • May 15, 2024
  • 0 Comments

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பினால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன அனுமதிப்பத்திரத்தை மீள வழங்குவதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டம் தொடங்கிய உடனேயே பொலிஸார் பதாகைகளை அகற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கபில முனசிங்கவிடம் மனு ஒன்றைக் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.  

ஆசியா

சிங்கப்பூரில் 20 ஆண்டுகளில் இடம்பெறவுள்ள முக்கிய மாற்றம் – அரசியல் களத்தில் பரபரப்பு!

  • May 15, 2024
  • 0 Comments

சிங்கப்பூரை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் “லீ சியன் லூங்” தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அவர் பதவி விலகும்போது, நாட்டின் அரசியலில் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். சிங்கப்பூரை இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த லீ இன்று இரவு தனது அதிகாரங்களை அந்நாட்டின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைப்பார். சிங்கப்பூர் 1965 இல் சுதந்திர நாடானது. அதன்பிறகு 59 ஆண்டுகளில் […]

பொழுதுபோக்கு

20 கோடி சம்பளம் – யஷ் படத்துக்கு நோ சொன்ன லேடி சூப்பர் ஸ்ட்டார்

  • May 15, 2024
  • 0 Comments

கேஜிஎஃப் படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்த கன்னட நடிகர் யஷ் தற்போது நடித்து வரும் டாக்ஸிக் படத்தில் வலுவான அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்திலும் அதே போல ஹீரோயினை தாண்டி முக்கியமான பெண் கதாபாத்திரம் ஒன்று உள்ளது எனக் கூறுகின்றனர். அந்த படத்தில் அவருக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகை கரீனா கபூர் தான் முதலில் […]

ஆசியா

இந்தோனேசியா- மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 58 பேர் பலி!

  • May 15, 2024
  • 0 Comments

இந்தோனேசியாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் எரிமலையும் வெடித்திருப்பதால், சாம்பலும் வெள்ளத்தில் கலந்து, பெரும்பாலான இடங்கள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. சுமத்ரா மாகாணத்தில் 4 மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்தோனேசியாவில் கனமழை-வெள்ளத்தில் 58 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலரை காணவில்லை […]

ஐரோப்பா

இங்கிலந்தில் இந்திய வம்சாவளிப் பெண் கொடூரமாக குத்தி கொலை

  • May 15, 2024
  • 0 Comments

இங்கிலாந்தில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா முகே ( 66). இவர் தேசிய சுகாதார சேவையில் மருத்துவ செயலாளராக பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். இவர் வடமேற்கு லண்டனில் உள்ள எட்க்வேர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென்று கத்தியால் அனிதாவை சரமாரியாக குத்தினார். மார்பு, கழுத்து ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்ட அனிதா பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து பொலிஸார் வழக்குப் […]

இலங்கை செய்தி

இலங்கையில் பரீட்சை நிலையத்திற்குச் சென்ற இரு மாணவிகள் மாயம்

  • May 15, 2024
  • 0 Comments

இலங்கையில் நேற்றைய தினம் பரீட்சை நிலையத்திற்குச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளனர். கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக சென்ற மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவிகள் இருவரும் நேற்று காலை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அம்பகமுவ பகுதியிலுள்ள பாடசாலை பரீட்சை நிலையத்திற்கு பிரவேசித்துள்ளனர். கினிகத்தேனை மற்றும் நாவலப்பிட்டி – நாகஸ்தென்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறித்த இரு மாணவிகளும் […]

உலகம் செய்தி

சர்வதேச வேலை சந்தையை ஆட்டங்காண வைத்த AI – IMF தகவல்

  • May 15, 2024
  • 0 Comments

சர்வதேச வேலை சந்தையை செயற்கை நுண்ணறிவு சுனாமியைப் போல் பாதித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளில் 60 சதவீதத்தை வேலைகளைச் செயற்கை நுண்ணறிவு பாதிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளில் உலகெங்கும் உள்ள வேலைகளில் 40 சதவீத்தை செயற்கை நுண்ணறிவு பாதிக்கக்கூடும் என கிறிஸ்டலினா தெரிவித்தார். அந்த நிகழ்விற்கு மக்களை, வர்த்தகங்களைத் தயார்ப்படுத்தப் போதிய நேரம் இல்லை,” என்று அவர் குறிப்பிட்டார். சூழ்நிலையைச் […]

பொழுதுபோக்கு

ஜெட் வேகத்தில் வரும் “டிராகன்”… சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

  • May 15, 2024
  • 0 Comments

நடிகர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி, லவ் டுடே படங்களை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் இணைந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த 6ம் தேதி சென்னையில் துவங்கிய சூழலில் முதல் கட்ட ஷூட்டிங்கை நேற்றைய தினம் படக்குழுவினர் நிறைவு செய்துள்ளனர். இதையடுத்து விரைவில் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் […]

இலங்கை செய்தி

அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்

  • May 15, 2024
  • 0 Comments

கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட எவரும் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒதுக்கப்பட்ட ஒரு வழக்கில், அஸ்ட்ராஜெனெகாவை உற்பத்தி செய்யும் நிறுவனம் தடுப்பூசியின் சிக்கல்கள் குறைவாக இருப்பதாக ஒப்புக்கொண்டது. எவ்வாறாயினும், இந்த சிக்கல்கள் எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய ஒன்றல்ல என்பதால், இது எந்தவிதமான பாதகமான விளைவையும் ஏற்படுத்தாது என்று நிபுணர் கூறினார். முன்னதாக, அஸ்ட்ராஜெனெகா அறிமுகப்படுத்திய கொரோனா […]

செய்தி வாழ்வியல்

எடையை குறைக்க நடிகர் விக்ரம் செய்யும் விடயம்!

  • May 15, 2024
  • 0 Comments

கோலிவுட்டில் இருக்கும் திறமையான நடிகர்களுள் ஒருவர், நடிகர் விக்ரம். கிட்டத்தட்ட 24 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் இருக்கும் இவர், கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர். எந்த படத்தை எடுத்துக்கொண்டாலும் அதற்காக எந்த தூரத்திற்கு வேண்டுமானாலும் சென்று தனது உடல் அமைப்பை மாற்றிக்கொள்வார். இதனால் ஏற்படும் விளைவ்களையும் அசால்டாக சமாளிப்பார். இவருக்கு, இன்று பிறந்தநாள். இதையொட்டி, விக்ரம் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள என்ன செய்கிறார் என்று பார்ப்போமா? ‘சேது’ படத்தில், சியான் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததால் […]

error: Content is protected !!