பொழுதுபோக்கு

ஜெட் வேகத்தில் வரும் “டிராகன்”… சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?

நடிகர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி, லவ் டுடே படங்களை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் இணைந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த 6ம் தேதி சென்னையில் துவங்கிய சூழலில் முதல் கட்ட ஷூட்டிங்கை நேற்றைய தினம் படக்குழுவினர் நிறைவு செய்துள்ளனர்.

இதையடுத்து விரைவில் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

படத்தின் சூட்டிங் எடுக்கும் வேகத்தை பார்த்தால் இந்த ஆண்டிலேயே படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐசி படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வரும் சூழலில் உடனடியாக அடுத்த படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். படத்துக்கு படம் அவர் தனது சம்பளத்தை உயர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒரு படத்திற்கு 20 கோடி ரூபாய் வரை பிரதீப் ரங்கநாதன் சம்பளமாக பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content