ஐரோப்பா

ஜெருசலேமில் உள்ள சோதனை சாவடியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

  • November 17, 2023
  • 0 Comments

ஜெருசலேம் மற்றும் மேற்குக்கரை நகரமான பெத்லஹேமுக்கு இடையே உள்ள ஒரு சோதனைச் சாவடியில் மூன்று பாலஸ்தீனியர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்த தாக்குதல்களால் பலர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி ஏந்தியவர்கள் மிகப் பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக காவல்துறைத் தலைவர் யாகோவ் ஷப்தாய் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, சந்தேகநபர்களுடைய வாகனத்தில் இருந்து இரண்டு தானியங்கி துப்பாக்கிகள், இரண்டு கைத்துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான தோட்டாக்கள்,  மற்றும் […]

விளையாட்டு

ஆஸ்திரேலியாவில் சூப்பர் மார்க்ட் சலுகைகளை பெறும் முயற்சியில் மக்கள்

  • November 17, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் பல்பொருள் அங்காடிகள் வழங்கும் வெகுமதி புள்ளிகளின் எண்ணிக்கையில் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளனர். ஃபைண்டர் வெளியிட்ட அறிக்கையின்படி, கிட்டத்தட்ட 83 சதவீத நுகர்வோர் ஒருவித போனஸ் திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். 58 சதவீதம் பேர் ஸ்டோர் பில்களில் இருந்து எந்த தொகையையும் குறைக்க சலுகைகளைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர். விமான டிக்கெட்டுகளை வாங்க 13 வீதமானவர்கள் இவ்வாறான சலுகைகளை பயன்படுத்துகின்றனர் மேலும் 06 வீதமானவர்கள் எக்காரணம் கொண்டும் அவற்றை பயன்படுத்துவதில்லை. இருப்பினும், சராசரி […]

வட அமெரிக்கா

அமெரிக்கா வெள்ளை மாளிகை முன் பரபரப்பை ஏற்படுத்திய உருவபொம்மைகள்!

  • November 17, 2023
  • 0 Comments

அமெரிக்கா வெள்ளை மாளிகை முன் உருவபொம்மைகளை சடலங்கள் போல் அடுக்கி அம்னெஸ்டி இண்டர்நேஷனல் போராட்டம் நடத்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததை கண்டிக்கும் விதமாக “அம்னெஸ்டி இண்டர்நேஷனல்” என்ற மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி மாளிகை முன் வெள்ளைத்துணியால் போர்த்தப்பட்ட உருவபொம்மைகளை சடலங்கள் போல் அடுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். காஸாவில் உடனடியாக போரை நிறுத்தும்படி இஸ்ரேல் அரசை நிர்பந்திக்குமாறு ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர். […]

ஐரோப்பா

பிரேசிலில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு கறுப்பினத்தவர் உயிரிழக்கிறார்!

  • November 17, 2023
  • 0 Comments

பிரேசிலில் காவல்துறை வன்முறையால் கடந்த ஆண்டு ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கறுப்பினத்தவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொது பாதுகாப்பு அமைப்புகளின் குடைக் குழுவான பாதுகாப்பு கண்காணிப்பு வலையமைப்பின் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் காவல்துறை நடவடிக்கைகளின் விளைவாக குறைந்தது 2,770 கறுப்பின மற்றும் கலப்பு இன பிரேசிலியர்கள் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கறுப்பின மற்றும் கலப்பு இன பிரேசிலியர்கள் நாட்டின் 203 மில்லியன் மக்களில் 56 சதவீதம் பேர் உள்ள நிலையில்,  இது போன்ற […]

செய்தி

Tossஇல் ஏமாற்றினாரா ரோஹித்…? முன்னாள் பாகிஸ்தான் வீரர் சொல்லும் காரணம்

  • November 17, 2023
  • 0 Comments

நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றுள்ளது. அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 70 ரன்களுக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது. இந்திய அணிக்கு வெற்றிக்கு காரணமாக இருந்த ஷமி ஆட்ட நாயகனாக தேர்வானார், அவர் நேற்று 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட்டிங்கில்ல விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சதம் அடித்து உதவினர். குறிப்பாக, கேப்டன் ரோஹித் சர்மாவின் தொடக்கம் என்பது […]

மத்திய கிழக்கு

காசா பகுதியில் இணை சேவைகள் துண்டிப்பு!

  • November 17, 2023
  • 0 Comments

காசா பகுதி முழுவதும் எரிபொருள் பற்றாக்குறையால் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் சரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தனது அடுத்தக்கட்ட தாக்குதல்களை தொடங்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில், வடக்கில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸின் தடயங்களை இஸ்ரேல் படையினர் இரண்டாவது நாளாகத் தேடி வருகின்றனர். ஒரு கட்டிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை அவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர், ஆனால் ஹமாஸ் மையத்தின் கட்டளை மையத்தின் எந்த ஆதாரத்தையும் இன்னும் வெளியிடவில்லை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்

  • November 17, 2023
  • 0 Comments

வாட்ஸ் அப்பில் பயன்பாட்டில் உள்ள அன்லிமிடெட் பேக்கப் அம்சத்தை நீக்குவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓரிடத்தில் இருந்து உலகின் மற்றொரு மூலையில் இருக்கும் ஒருவருக்கு நொடியில் தகவல்களை பரிமாற தற்போதைய நவீன யுகத்தில் பல்வேறு செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. ஆனாலும் வாட்ஸ் அப் உலகம் முழுவதும் மிக அதிக மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய தொலைதொடர்பு சாதனமாக உருவாகியுள்ளது. நொடிப்பொழுதில் தகவல்களை பரிமாறுவதோடு மட்டுமல்லாமல் வீடியோக்கள், ஆடியோக்கள், ஸ்டேட்டஸ்கள் என்று பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு முன்னணி தொலைத்தொடர்பு […]

இலங்கை

இலங்கையில் மலையகம் ஊடான ரயில் போக்குவரத்திற்கு தடை!

  • November 17, 2023
  • 0 Comments

தியத்தலாவ பகுதியில் புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. இதனால் மலையகம் ஊடான  ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தியத்தலாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத பாதையில் மண் மற்றும் பாறைகள் வீழ்ந்துள்ளதால் உதர புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை

இலங்கையில் மீளவும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அதிகரிக்கும் அபாயம் : மக்களின் நிலை என்ன?

  • November 17, 2023
  • 0 Comments

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலை 420 ரூபாவை தாண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்  சன்ன ஜயசுமண நேற்று (16.11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்கவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து டீசல் மற்றும் பெற்றோலுக்கு VAT விதிக்கப்படும் என ஷெஹான் சேமசிங்க சபையில் முன்வைத்தார். இதன்போது டீசல் மற்றும் பெற்றோலில் விலை குறித்த கேள்வியை சன்ன […]

ஐரோப்பா

பிரான்ஸில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • November 17, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வருடத்தின் மூன்றாவது காலாண்டில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இரண்டாவது காலாண்டில் 7.2% சதவீதமாக இருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை 0.2% சதவீதத்தால் அதிகரித்து தற்போது 7.4% சதவீதமாக உள்ளது. இத்தகவலை INSEE நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அதிகரிப்பு நாம் எதிர்பார்த்தது தான். உலக பொருளாதார சரிவின் ஒரு பகுதியாக இது உள்ளதென பிரெஞ்சு தொழிலாளர் அமைச்சர் Olivier Dussopt தெரிவித்தார். அதேவேளை, பணவீக்கம் மெல்ல மெல்ல சீரடைந்து வருகிறது. […]