உலகம்

14 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு உத்தரவு!

  • July 26, 2023
  • 0 Comments

14 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பெடரல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மெட்டா நிறுவனம் தொடர்பான நட்டஈட்டை அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலம் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் சரியான அறிவு இல்லாமல் சேகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷன் 271,000 முறை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து  மெட்டாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் […]

ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலிய செய்னேஸ் கடற்கரையில் கரையொதுங்கிய 51 திமிங்கிலங்கள் உயிரிழப்பு

  • July 26, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய கடற்கரையொன்றில் 51 திமிங்கிலங்கள் கரையொதுங்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். பேர்த் நகரிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அல்பானி நகருக்கு அருகிலுள்ள செய்னேஸ் கடற்கரையில் பைலட் வேல் இனத்தைச் சேர்ந்த சுமார் 100 திமிங்கிலங்கள் செவ்வாய்க்கிழமை மாலை காணப்பட்டது. இதனையடுத்து மேற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் பூங்கா மற்றும் வனஜீவராசிகள் துறை அதிகாரிகள் இத்திமிங்கிலங்களை காப்பாற்றுவற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இந்நலையில், இன்று காலை 51 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் எஞ்சியுள்ள 46 […]

இலங்கை

மெனிங் சந்தை பகுதியில் போராட்டம் நடத்திய 12 பேர் கைது!

  • July 26, 2023
  • 0 Comments

மெனிங் சந்தை பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தின் குறித்த தடையை மீறி போராட்டம் நடத்திய மெனிங் பொதுச் சந்தை தொழிற்சங்கத்தின் தலைவர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு இன்று (26.07) காலை பேலியகொட பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பேலியகொட மெனிங் பொதுச் சந்தையில் கடையடைப்பு வழங்குவதில் ஏற்பட்ட […]

பொழுதுபோக்கு

வெறித்தனமாக தனுஷை காதலித்த காந்தக்குரல் பாடகி… கடைசியில் பைத்தியமான கதை வெளியானது….

  • July 26, 2023
  • 0 Comments

திரையுலகை பொருத்தவரை எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. இது போன்ற சர்ச்சைகளையே youtube தளத்தில் பேசி சமீப காலமாக பிரபலமாகி வருகிறார், நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். தனுஷை மிகவும் தீவிரமாக காதலித்த பாடகி ஒருவரை பற்றியும், அவரால் அந்த பாடகி சந்தித்த பிரச்சனைகள் குறித்தும் பயில்வான் பேசி உள்ளது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. தன்னுடைய காந்தக் குரலால் தமிழ் சினிமாவில் பல பாடல்கள் பாடி, பிரபலமானவர் சுசித்ரா. இவர் பிரபல […]

மத்திய கிழக்கு

தென் ஆப்பிரிக்காவில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேரூந்துகள் ; 77 பேர் படுகாயம்

  • July 26, 2023
  • 0 Comments

தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்க பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்குள்ள மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பஸ் சென்று கொண்டிருந்தது. பல்கலைக்கழகத்தின் முன்பு வந்தபோது எதிரே வந்த மற்றொரு பஸ் இதன்மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் மாணவர்கள் உள்பட 77 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக […]

வட அமெரிக்கா

கனடாவை அச்சுறுத்தும் வெள்ளம் – 2 சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் மரணம்

  • July 26, 2023
  • 0 Comments

கனடாவின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள 2 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து மரண எண்ணிக்கை 3ஆக அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமை நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) உள்ள தங்களது வீட்டை விட்டு வெளியேறச் சிறுவர்கள் முயன்றபோது அவர்களை ஏற்றியிருந்த வாகனம் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டது. காரில் இருந்த மேலும் 3 பேர் உயிர்தப்பினர். அதே போன்ற சூழ்நிலையில் காணாமல் போன 52 வயது […]

பொழுதுபோக்கு

குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாது… நடுரோட்டில் மூக்குடைப்பட்ட சிவாங்கி

  • July 26, 2023
  • 0 Comments

நடிகர் கூல் சுரேஷ் நேற்று சென்னையில் போக்குவரத்து காவலர்களின் உதவியுடன் சாலை விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை புரமோட் செய்தார். அப்போது சாலையில் சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வருபவர்களிடம் கட்டாயம் அதெல்லாம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர், டிரிங்க் அண்ட் டிரைவ் செய்யக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். இந்த சமயத்தில் அந்த வழியாக காரில் வந்த சிவாங்கியை நடுரோட்டில் மடக்கிப் பிடித்தார் கூல் சுரேஷ், அப்போது சிவாங்கி சீட் பெல்ட் அணியாமல் […]

இலங்கை

பேலியகொட மெனிக் சந்தையில் ஏற்பட்ட குழப்ப நிலை – பலர் கைது

  • July 26, 2023
  • 0 Comments

பேலியகொட மெனிக் சந்தையில் வியாபாரிகள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் வியாபார சம்மேளனத்தின் தலைவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொட மெனிக் சந்தையில் அமைந்துள்ள கடைகளை வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமு. குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இருந்த போதும் வியாபாரிகள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வியாபார சம்மேளனத்தின் […]

கருத்து & பகுப்பாய்வு

கனடா சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • July 26, 2023
  • 0 Comments

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கனடாவிற்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க அல்லது கனடாவின் இயற்கை அழகை அனுபவிக்க வருகிறார்கள். கனடா விசா ஆறு மாத காலத்திற்கு வழங்கப்படுகிறது மற்றும் ஒற்றை நுழைவு அல்லது பல நுழைவு விசாக்கள் ஆகும். கனடா விசிட் விசாவில் உங்களால் வேலை செய்ய முடியாது என்றாலும், சுற்றுலா மற்றும் ஓய்வுக்காக கனடா முழுவதும் பயணம் செய்யலாம். கனடா வருகை விசா விவரங்கள் கனடா விசிட் விசா […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி – ஆசிய நாட்டவரை தேடும் பொலிஸார்

  • July 26, 2023
  • 0 Comments

மெல்போர்னின் தென்மேற்கு பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தெற்காசிய ஆடவரை கைது செய்ய விக்டோரியா மாநில பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். பொய்ன்ட் குக் பகுதியில் வைத்து குறித்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 25 வயதான சந்தேக நபர் இந்திய பிரஜையாக இருக்கலாம் அல்லது தெற்காசிய நாட்டின் பிரஜையாக இருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் சாம் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தன்னை அறிமுகப்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவரின் புகைப்படம் தற்போது […]

error: Content is protected !!