பொழுதுபோக்கு

குடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாது… நடுரோட்டில் மூக்குடைப்பட்ட சிவாங்கி

நடிகர் கூல் சுரேஷ் நேற்று சென்னையில் போக்குவரத்து காவலர்களின் உதவியுடன் சாலை விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை புரமோட் செய்தார்.

அப்போது சாலையில் சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வருபவர்களிடம் கட்டாயம் அதெல்லாம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்திய அவர், டிரிங்க் அண்ட் டிரைவ் செய்யக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த சமயத்தில் அந்த வழியாக காரில் வந்த சிவாங்கியை நடுரோட்டில் மடக்கிப் பிடித்தார் கூல் சுரேஷ், அப்போது சிவாங்கி சீட் பெல்ட் அணியாமல் வந்ததை பார்த்ததும், அவரிடம் பிரபலங்களாக இருக்கும் நாமே இப்படி செய்யலாமா, முதல்ல சீட் பெல்ட் போடு சிவாங்கினு சொல்ல, அங்கு டிராபிக் ஜாம் ஆனது.

இதைப்பார்த்து பதறிப்போன சிவாங்கி, ஆள விடுடா சாமினு கிளம்ப நினைக்க அவரை செல்லவிடாமல் சாரி சொல்லிட்டு போ என கூல் சுரேஷ் சொன்னதும் வேறுவழியின்றி சாரினு சொல்லிவிட்டு கிளம்பினார்.

அவரிடம் டிடி ரிட்டர்ன்ஸ் பட போஸ்டரை காட்டி டிடி-னா டிரிங் அண்ட் டிரைவ், குடிச்சிட்டு வண்டி ஓட்டாத சிவாங்கினு சொல்லி நடுரோட்டில் டேமேஜ் செய்துவிட்டார் கூல் சுரேஷ்.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்