இலங்கை

பேலியகொட மெனிக் சந்தையில் ஏற்பட்ட குழப்ப நிலை – பலர் கைது

பேலியகொட மெனிக் சந்தையில் வியாபாரிகள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் வியாபார சம்மேளனத்தின் தலைவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொட மெனிக் சந்தையில் அமைந்துள்ள கடைகளை வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமு.

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இருந்த போதும் வியாபாரிகள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வியாபார சம்மேளனத்தின் தலைவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்