இலங்கை

மெனிங் சந்தை பகுதியில் போராட்டம் நடத்திய 12 பேர் கைது!

மெனிங் சந்தை பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் குறித்த தடையை மீறி போராட்டம் நடத்திய மெனிங் பொதுச் சந்தை தொழிற்சங்கத்தின் தலைவர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு இன்று (26.07) காலை பேலியகொட பொலிஸ் நிலையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பேலியகொட மெனிங் பொதுச் சந்தையில் கடையடைப்பு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையின் அடிப்படையில் வர்த்தக சங்கம் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. இதற்கமைய இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்