பிரித்தானியாவில் பொலிஸார் துரத்திய வாகனம் விபத்து – இருவர் உயிரிழப்பு
பிரித்தானியாவின் லீட்ஸில் Leeds பொலிஸாரினால் துரத்தப்பட்ட BMW கார் ஒன்று வோக்ஸ்வாகன் சிரோக்கோ Volkswagen Scirocco காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கெல்டர்ட் Gelderd சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் யார்க்கைச் சேர்ந்த 22 வயது இளைஞரும், 23 வயது இளம் பெண்ணும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்ககப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 39 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக கஞ்சா போதையில் வாகனம் ஓட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேநேரம் BMW காரில் பயணித்த 16 மற்றும் 17 வயதுடைய மூன்று இளம் வயதினர் லேசான காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கு யார்க்ஷயர் Yorkshire காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




