Consent Preferences
ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவுடன் மோதல்: பிரித்தானியாவில் களமிறங்கினார் உக்ரைன் ஜனாதிபதி

அமெரிக்காவுடனான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி புதன்கிழமை பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவுடனான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி புதன்கிழமை பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இவ்விஜயத்தின்போது அவர் பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) மற்றும் மன்னரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ரஷ்யாவின் தீவிரத் தாக்குதலுக்கு மத்தியில் தாம் பிரித்தானியாவை சென்றடைந்துள்ளதாக செலென்ஸ்கி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், எலோன் மாஸ்க்கின் இலாப நோக்கற்ற நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), ஸ்டார்லிங்க் (Starlink) சேவைகளைக் கட்டுப்படுத்தியதன் மூலம் தங்களது ட்ரோன்களின் செயல்பாட்டை முடக்கியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டிய சில மணிநேரங்களிலேயே இந்த விஜயம் அமைந்தது.

கடந்த 2025 பெப்ரவரியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து செலென்ஸ்கி லண்டனுக்கு விஜயம் செய்திருந்தார்.

அதேபோன்று, தற்போதும் உக்ரைனுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைத் தொகுப்பை வழங்வுள்ளதாகப் பிரதமர் பர்ன்ஹாம் வாக்குறுதி அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி