இலங்கை

யோஷித ராஜபக்ஷவுக்கு 5.15 மில்லியன் சம்பளம் – நீதிமன்றத்தில் அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலங்கை கடற்படையில் பணியாற்றிய காலத்தில் சுமார் 5,150,626 ரூபாய்களைச் சம்பளமாகப் பெற்றுள்ளார் என்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று (15) தெரிவிக்கப்பட்டது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்ட பணமோசடி வழக்கின் விசாரணையின் போது, ​​நீதிமன்றத்தில் சாட்சியமளித்த கடற்படை அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இந்த மொத்தத் தொகையானது, கடற்படையில் பணியாற்றிய காலத்தில் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தைக் குறிப்பதாகவும், இதில் மேலதிக படிகள் (allowances) எதுவும் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் சாட்சி விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்