இலங்கை செய்தி

அனோஜனுக்காக முன்நின்ற அரசு ஞானசார விடயத்தில் மௌனம் காப்பது ஏன்?

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜனுக்காக முன்நின்ற அரசாங்கம், ஞானசார தேரர் விவகாரத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டைப் பின்பற்றுவது ஏன் என்று அம்பிட்டிய சுமனரத்தன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜனுக்காக முன்நின்ற அரசாங்கம், ஞானசார தேரர் விவகாரத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டைப் பின்பற்றுவது ஏன் என்று அம்பிட்டிய சுமனரத்தன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று மேலும் கூறியதாவது,

“சரத் பொன்சேகா, ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதனை எவரும் சவாலுக்குட்படுத்தவில்லை.

ஆனால், ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதி அளித்த பொதுமன்னிப்பு எவ்வாறு சட்டவிரோதமாகும்?சிங்கள, பௌத்த மக்களை மண்டியிட வைப்பதற்கும், புலம்பெயர் டயஸ்போராக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவுமா இவ்வாறு செய்யப்பட்டது எனக் கேட்கின்றோம்?

அனோஜனைக் காப்பாற்றிவிட்டதாகக் கூறும் அரசாங்கம், ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்காதது ஏன்? மகாசங்கத்தினர் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்; அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை” என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை