இலங்கை செய்தி

நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் விஜித ஹேரத்!

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மேற்படி இரு நாடுகளும் விடுத்த அழைப்பின் பிரகாரமே அவர் எதிர்வரும் மே 26 முதல் ஜூன் 3 ஆம் திகதி வரை இவ்விஜயத்தை மேற்கொள்கின்றார்.

நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் மற்றும் ஆஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் ஆகியோருடன் இரு தரப்பு சந்திப்பில் ஈடுபடவுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார்.

மேலும், இரு நாடுகளிலும் உள்ள மூத்த அரசாங்கப் பிரதிநிதிகள், அதிகாரிகள், வணிகத் தலைவர்கள், கல்வியாளர்களையும் விஜித ஹேரத் சந்திக்கவுள்ளார்.

அதேபோல நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் இலங்கையர்களையும் சந்திக்கவுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!