Consent Preferences
இந்தியா

திருப்பரங்குன்றத்தில் மாலை 05.00 மணிக்கு தீபம் ஏற்ற ஏற்பாடு

திருப்பரங்குன்றத்தில் மாலை 05.00 மணிக்கு தீபம் ஏற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் களத்திற்கு நீதிபதிகள் வருகை தந்துள்ளனர்.

ஓய்வுபெற்ற நீதிபதிகளான வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் களத்திற்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் திருபரங்குன்றம் சிஆர்பிஎஃப் வீரர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் பொது அமைதியை பாதுகாக்க மக்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு செல்ல 50 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் நிர்வாக பொறுப்பாளர்களாக உள்ள நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் அனுமதி பெற்றவர்கள் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர்த்து இதர நபர்கள் மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட 50 நபர்கள் பிற்பகல் 2.30 மணி முதல் 3.00 மணிக்குள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே