Consent Preferences
இலங்கை செய்தி

உயிரிழந்த பின்னரும் வாழ்வளித்த 19 வயது இளைஞன்: இலங்கையில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட 19 வயது இளைஞனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்ததையடுத்து, பல நோயாளிகளுக்கு மறுவாழ்வு பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட 19 வயது இளைஞனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்ததையடுத்து, பல நோயாளிகளுக்கு மறுவாழ்வு பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கையில் மேல் மாகாணம், கம்பஹா மாவட்டத்தில் வெயங்கொடையைச் சேர்ந்த குறித்த இளைஞன், வீதி விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்தமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இதயம், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவற்றைத் தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, விசேட மருத்துவக் குழுவினர் உடல் உறுப்புகளைப் பெற்றுக்கொண்டதுடன், இலங்கை விமானப்படையின் ஒத்துழைப்புடன் அவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதன்போது, இளைஞனின் இதயம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 17 வயது நோயாளி ஒருவருக்குப் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனது மகனை இழந்த துயரத்திலும், அவரது உடல் உறுப்புகள் மூலம் ஏனையோருக்கு வாழ்வளிக்க முடிந்தமை குறித்து தந்தை உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

“உன்னால் இன்று பலர் உயிர்வாழப் போகின்றார்கள். எனது அன்பு மகனே, எங்களை விட்டுப் பிரிவதற்கு முன்னர் மற்றவர்களுக்கு வாழ்வைக் கொடுத்துவிட்டாய்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “எனது மகன் அவனது தாய், என்னையும், மூத்த சகோதரனையும், இளைய சகோதரியையும் விட்டுச் சென்றுவிட்டான். நீ இல்லாமல் இந்த வீட்டில் நாம் நால்வரும் எவ்வாறு வாழப்போகின்றோம்?” எனவும் அவர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

மருத்துவக் குழுவினர், இலங்கை விமானப்படையினர் மற்றும் இளைஞனின் குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் இந்த உடல் உறுப்பு தானப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை